வித்தியாசமான நடிகர்களில் சௌந்தர்ராஜாவும் ஒருவர். கதைநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்துவார். "சுந்தரபாண்டிய'-னில் தன் பயணத்தைத் தொடங்கிய சௌந்தர்ராஜா சமீபத்திய தமிழ் ஹிட் படங்களின் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்கிறார்.

soundrarajan

கார்த்தியின் "கடைக்குட்டி சிங்கம்', விஷ்ணு விஷாலின் "சிலுக்குவார்பட்டி சிங்கம்', இரண்டு படங்களிலும் குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ.வாக கெத்தான வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தாராஜாவின் நடிப்புக்கு பலதரப்பிலும் பாராட்டுகள். ""சிங்கங்களை எதிர்த்து நின்று கெத்தாக சீறியதோடு மட்டுமின்றி; ரசிகர்களை சிரிக்கவும் வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி'' என்கிறார் சௌந்தர்ராஜா.

Advertisment