Advertisment

லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே இணைப்பு -ஷெரின் ஓப்பன் டாக்!

/idhalgal/cinikkuttu/link-between-lasallia-and-me-sherins-open-talk

ங்குபெறுபவர்களை சந்தோஷம், உற்சாகம், துயரம், ஆத்திரம், ஆங்காரம், வன்மம், கொந்தளிப்பு என பல்வேறு உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஆழ்த்தி எடுத்து, சாதாரணமானவர்களையே நவரசத் திலகமாக வார்த்து எடுக்கும் "பிக்பாஸ்' சீஸனில் ஷெரின்மாதிரி தொழில்முறை நடிகை நடித்தால் கேட்கவா வேண்டும்! "பிக்பாஸ்-3' தன்னை ரொம்பவே மெருகேற்றி யிருக்கிறது என்கிறார் இந்த சீஸனில் நான்காவது இடத்துக்கு வந்து ஆறு

ங்குபெறுபவர்களை சந்தோஷம், உற்சாகம், துயரம், ஆத்திரம், ஆங்காரம், வன்மம், கொந்தளிப்பு என பல்வேறு உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஆழ்த்தி எடுத்து, சாதாரணமானவர்களையே நவரசத் திலகமாக வார்த்து எடுக்கும் "பிக்பாஸ்' சீஸனில் ஷெரின்மாதிரி தொழில்முறை நடிகை நடித்தால் கேட்கவா வேண்டும்! "பிக்பாஸ்-3' தன்னை ரொம்பவே மெருகேற்றி யிருக்கிறது என்கிறார் இந்த சீஸனில் நான்காவது இடத்துக்கு வந்து ஆறுதல்பட்டுக் கொண்டிருக்கும் ஷெரின்.

Advertisment

போதிமரத்தடியில் புத்தனுக்கு கிடைத்த ஞானத்தைப்போல "பிக்பாஸ்' வீட்டில் ஷெரினுக்குக் கிடைத்த சில ஞானங்கள்...

""100 நாட்கள் "பிக்பாஸ்' ஷோவில் தாக்குப்பிடித்து அந்த வீட்டுக்குள் இருந்தது எனக்கு வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்திருக்கிறது!

ss

Advertisment

தமிழ் தெரியாதது "பிக்பாஸ்' வீட்டில் முதலில் சிரமமாகத்தான் இருந்தது. அவர்கள் சொன்ன கமெண்ட், ஜோக்ஸ் இதெல்லாம் முதலில் புரியவில்லை. அவர்கள் நடுவே நான் அந்நியமானவளாக நின்றிருப்பதுபோல் உணர்ந்தேன். நாட்கள் செல்லச்செல்ல சிரமமெடுத்துத் தமிழைப் புரிந்து கொண்டபோது, போட்டியில் பங்கேற்பது எளிதானது.

தர்ஷனுடான நட்பை காதல் விவகாரமாக வனிதா திரித்தது எதிர்பாராதது. நமது உறவுகளுக்கு பெயர்சூட்டுவது தேவையற்றது. அந்தக் கணத்தில் அது எதுவோ அது தான். அதனை காதல் என பெயர்சூட்டுவது அதை மாசுபடுத்துவதாகும்!

lll

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் மெல்ல மெல்ல ஒரு பிணைப்பை உருவாக்கி வளர்த்தெடுத்தோம். நாட்கள் செல்லச்செல்ல அந்தப் பிணைப்பு வளர்ந்தது. லாஸ்லியாவுக்கும் எனக்குமான ஏற்ற- இறக்கங்கள் இருந்தாலும், கடைசிக்கட்டத்தில் எங்களுக் கிடையே ஒரு அருமை யான பிணைப்பு ஏற்பட்டிருந்தது.

"பிக்பாஸ்' வீட்டில் மிக உடனடியாக ஒருவருக்கொருவர் ரியாக்ஷன் செய்கிறார் கள். இந்த வீடு நமது ஆளுமையில் ஏற்படுத் தும் மாற்றம் இதுதான்.

இனி, படங்களில் நடித்தால் ஏதோ வந்தோம்...

போனோம்...ங்கிற மாதிரியான கேரக்டர் அமையுற படங்களில் நடிக்கவிரும்பவில்லை.

என்னோட திறமையை அங்கீ கரித்து பயன்படுத்திக்கொள்கிற டீம் அமைகிற படங்களில் மட்டுமே நடிப்பேன்.

கூடவே, இசைமீதான பிரியமும் டி.ஜே. (டிஸ்க் ஜாக்கி) வாய்ப்பும் இருப்பதால், அதன் மீதுதான் என் முதல் காதல்!

cini051119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe