Advertisment

இப்படியும் வாழ்த்தலாம்... நன்றி சொல்லலாம்...

/idhalgal/cinikkuttu/lets-congratulate-you-thank-you

ந்தனம் வந்தனம். நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோங்க. காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம். எங்க படத்து பேரு "தொரட்டி'ங்க. பட்டுன்னு புரியலன்னா சொல்றோங்க விளக்கம். கிடை போடும் கீதாரி கிடை காவல் காக்கும் ஆயுதம் தாங்க தொரட்டி. வெட்டவெளி வாழ்க்கை வெள்ளந்தி யான கூட்டம். ஆட்டோட ஆடா அலையும் அந்த அப்பாவி கூட்டம். கூட்டத்துல இளமறி ஒன்னு துள்ளி

ந்தனம் வந்தனம். நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோங்க. காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம். எங்க படத்து பேரு "தொரட்டி'ங்க. பட்டுன்னு புரியலன்னா சொல்றோங்க விளக்கம். கிடை போடும் கீதாரி கிடை காவல் காக்கும் ஆயுதம் தாங்க தொரட்டி. வெட்டவெளி வாழ்க்கை வெள்ளந்தி யான கூட்டம். ஆட்டோட ஆடா அலையும் அந்த அப்பாவி கூட்டம். கூட்டத்துல இளமறி ஒன்னு துள்ளிக்கிட்டு திசை மாறுது கண்ணு. வெந்த சோறு சுட்ட கறி, பட்ட சாராயத்துக்காக வாழும் வஞ்சகக் கூட்டம். வழி தப்பிவந்து அடைக்கல மாகும் இளமறி. கூறுபோடும் கூட்டத்துக்கு சோறு போடும் சூதுவாது அறியாத இளமறி. விதி சொல்லும் கணக்கு விடை சொல்வது யாரு. காத்திருக்கும் காலம் கனியும் போது முடியும் இந்த கணக்கு, அறியாத இளமறி மாயனாக ஷமன் மித்ரு. நாயகி செம்பொன்னுவாக சத்யகலா வாழ்ந்திருக்க, கறிக்கும் சாராயத்துக்கும் அலையும் காவாலி கூட்டமாக செந்தட்டி, ஈப்புலி சோத்துமுட்டி கதாபாத்திரங்களாக புதுமுகங்கள் நடிக்க வாய்க்கா, வரப்பு, ஆடு, பட்டி என பட்டிதொட்டி எங்கும் படமாக்க கலை அமைச்சு குடுத்த செல்லம் ஜெயசீலன்.

Advertisment

kuruvi

காட்டுப்பயலுக சண்டைய சமரசம் இல்லாமல் இரத்தமும் சதையுமா அமைச்சு குடுத்த "புயல்' சேகர் .காக்கா, குருவி, காடை, கவுதாரி மட்டுமில்லாமல் சில்லுவண்டு சத்தத்தக் கூட களத்துல இறங்கி பதிவு பண்ணுன ஒலிவடிவமைப்பாளர் பரணிதரன், காடுமேடெல்லாம் அலைஞ்சு மொத்த கதையும் ஒத்த கேமராக்குள்ள படம் புடிச்ச குமார் ஸ்ரீதர், பதறு வேற பயிறு வேறன்னு பதம் பார்த்து பிரிச்சு படம் தொகுத்த ராஜா முகமது, மண்வாசனை மாறாம பாட்டெழுதிய சினேகன், பாட்டுக்கு மெட்டு போட்ட வேத் சங்கர், இசைப் பிண்ணனியை முண்னனியா பண்ணுன ஜித்தின் ரோஷன், மொத்தக் கூட்டத்துக்கும் காவல காபந்தா நின்னு தயாரிச்ச ஷமன் மித்ரு, பக்குவமா பதம் பார்த்து படைப்பாக்கி இயக்கிய பி. மாரிமுத்து. அத்தனைக்கும் மேல திருகுமரன் என்டர்டெயின்மென் "தொரட்டி' படத்தை வெளியிடுறாங்க. இப்படி மொத்தபேரும் ஒன்னுகூடி வேர்வை சிந்தி விளையவச்ச வெள்ளாமைய குந்துமணி சிந்தாம வீடு வந்து சேர்க்கும் விவசாயி கணக்கா பாடுபட்டு உழைச்சத சாமிக்குப் படைக்கிற மாதிரி நினைச்சு உங்க முன்ன படைக்கிறோங்க. பாத்துட்டு சொல்லுங்க உங்க பாராட்ட.

Advertisment

-இப்படிக்கு

டைரக்டர் மாரிமுத்து

cine280818
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe