"ரோஜா மாளிகை' படத்தைத் தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம், அடுத்ததாகத் தயாரிக்கும் படம் "தோள் கொடு தோழா.'
கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மும்பையைச் சேர்ந்த அக்ஷிதா, பெங்களூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/friend_0.jpg)
ஒளிப்பதிவு- கே.எஸ்.செல்வராஜ், இசை- லியோ பீட்டர், எடிட்டிங்- எல்.வி.கே.தாஸ், கலை- செந்தில், நடனம்- அசோக்ராஜா, ஸ்டண்ட்- தளபதி தினேஷ், பாடல்கள்- விவேகா,சுந்தர், தயாரிப்பு மேற்பார்வை- மனோகரன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம்.
கலைப்புலி எஸ். தாணு, பேரரசு, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் தமிழ்ப்புத்தாண்டு அன்று குத்துவிளக்கு ஏற்றி "தோள் கொடு தோழா'வை துவக்கி வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/friend-t.jpg)