லேகா வாஷிங்டன் என்ற பேருக்கு ஏத்தபடி, ஆளும் வித்தியாசமானவர்தான்.
சின்னத்திரை தொகுப்பாளினி, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில நடிகை. சினிமா மட்டுமல்ல; மேடை நடிகை யும்கூட. இதை மட்டுமே நம்பியிருக்க லேகா தயாராக இல்லை.
தனது விருப்பத்துக்காக சிலை வடிப்பார். ஓவியங்கள் தீட்டுவார். பொருள்கள் தயாரிப்பு தொடர்பாக டிசைன் செய்து தருவார். இதற்காக மும்பையில் ஒரு டிசைனிங் ஸ்டுடியோ வைத்திருக்கிறார். படைப்புத் திறனில் பல விருதுகளை வாங்கியிருக்கிறார்.
"பர்னிங்மேன்' என்ற படத்துக்காக இவர் செய்துகொடுத்த டிசைன் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சுமார் 70 ஆயிரம் டிசைன்களில் இவருடையது செலக்ட் ஆகியிருக்கிறது.
பெரிய விஷயம்தான். இதுபோன்ற பல தரப்பட்ட திறமைகளை வைத்திருப்பதால்தான், சினிமா வாய்ப்புக்காக டைரக்டர் ஒருவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்று சமீபத்தில் வெளிப் படையாக சொல்ல முடிந்திருக்கிறது.
நல்ல நடிகைதான். "ஜெயங்கொண்டான்' படத்தில் வினய் தங்கையாக நன்றாக நடித்திருப்பார்.
அதனாலென்ன, நீங்க ஒங்க கலைகளில் கவனம் செலுத்துங்க மேடம்.