தர்வா முரளி நடிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடிகை லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகி யுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது...

ll

""எங்கள் படத்திற்கு ஹீரோயின் தேர்ந்தெடுப்பது என்பது மிகக்கடினமான பணியாக இருந்தது. இப்படத்தின் நாயகி பாத்திரத்தை முழுமையாக வடிவமைத்தபிறகு, "நல்ல கவர்ச்சியான, மென்மை மிகுந்த நேர்த்தியான, நாயகியாக' தேடினோம்.

Advertisment

அதேநேரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கும் திறமையும் வேண்டுமென்று நினைத்தோம். கண்மூடித் திறக்கும் நேரத்தில் வந்துபோகக்கூடிய பாத்திரம் அல்ல இது. படம் முழுவதும் பயணம் செய்யும் அழுத்தமான சக்திவாய்ந்த பாத்திரம். யோசித்துகொண்டிராமல் தெளிவாக முடிவை எடுக்கும் பாத்திரம். மற்றவர்கள்மீது வலியைத் திணிக்கும் படத்தின் வில்லன் பாத்திரத்தை நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கும் கனமான பாத்திரம்.

ll

இத்தனை குணங்கள் நிறைந்த வலுவான பாத்திரத்திற்கு பல ஹீரோயின்களை யோசித்து அலசி, இறுதியாக லாவண்யா திரிபாதியைத் தேர்ந்தெடுத்தோம். இந்தப் படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக இருக்குமென்பது உறுதி'' என்றார்.

ரவீந்திர மாதவா ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர்.