ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடந்தது.
விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் என்கிற ஏ.கே.
""இது என் 15 ஆண்டு கால கனவு. நான் இங்கே சிரமப்பட்டு வந்தேன் என்று சொல்வதைவிட பலரைச் சிரமப்படுத்தி -கஷ்டப் படுத்தி வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஒரு சாதாரண காமெடிப் படமாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால், அப்படியே இருக்கக்கூடாது என்று யோசித்தோம். பலவித வண்ணங்களையும் வாசனைகளையும் கலந்து இதை வேறுவகையான படமாக உருவாக்கி இருக்கிறோம். இதில் பலரது உழைப்பு இருக்கிறது. ஒரு புதிய படக்குழு செப்துள்ள புதிய முயற்சி இது. ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/latestsimran.jpg)
நாயகன் துருவா
""இயக்குநர் ஏ .கே ஒன்மேன் ஷோவாக பலவற்றைப் படத்தில் செய்திருக்கிறார். 90-களில் சிம்ரன் இருந்தமாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா. இதில் எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ஷாரா, ஆதித்யா நல்ல பெயர் பெறுவார்கள். ஒரு படத்திற்குக் கதைதான் முக்கியம் என்றாலும், விநியோகம் மிக முக்கியம் என்று இப்போது மாறியிருக்கிறது. ஆதரவு தாருங்கள்'' என்றார்.
நாயகி இந்துஜா
""இந்தப் படக்குழு குறும்பட உலகத்தில் இருந்து வந்தாலும், தங்கள் பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். குறும்படக்கலைஞர்கள் இருப்பதைக்கொண்டு சிறப்பாகச் செய்வதில் தேர்ச்சி பெற்றவர் களாக இருப்பார்கள். அப்படி இதிலும் செய்திருக்கிறார்கள்'' என்றார்!
லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் ""நானும் குறும்பட உலகத்திலிருந்து பெரும்படத்துக்கு பல கனவோடு வந்தவன். இந்தப் படக்குழுவினரைப் பார்க்கும் போது ஒரு நம்பிக்கை வருகிறது. டிரைலரைப் பார்க்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. படத்திலும் அது இருக்கும் என நம்புகிறேன்.
படத்தை எனக்குப் பிடித்திருந் தால் நிச்சயமாக நான் வாங்கி வெளியிடுவேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/latestsimran-t.jpg)