மேலைநாடுகளில் எழுதப் பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப் பட்டு வெற்றிபெற்று வருகின்றன. தமிழில் இம்முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது.

Advertisment

இருந்தும் "பத்ரகாளி', "முள்ளும் மலரும்', "47 நாட்கள்', "மோகமுள்', "சொல்ல மறந்த கதை', "பரதேசி', "அரவான்', "விசாரணை' போன்ற படங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளே. அவை திரைப் படமாக்கப்பட்டு விமர்சனரீதியாகவும் பேசப்பட்டு வணிகரீதியாக வெற்றியையும் விருதுகளையும் பெற்றுள்ளன.

Advertisment

lagaram

அந்த முயற்சியின் தொடர்ச்சியாக அடுத்து உருவாகியுள்ள படம் "ழகரம்.'

பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில், நந்தா நடிப்பில், தரன் இசையில், அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக் கத்தில் வெளியாக இருக்கிறது இந்த "ழகரம்' திரைப்படம் .பல விருது களைப் பெற்ற "ப்ராஜெக்ட் ஃ' நாவலின் தழுவல் இது.

இத்திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21-ஆம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் "தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் மறுபிரவேசம் எடுத்த நந்தா, சிறு இடைவெளிக்குப்பின் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டார்.