"சலோ ஜீத் ஹைன்' (கம் லெட்ஸ் லைவ்). மங்கேஷ் ஹடவாலே எழுதி, இயக்கி, தயாரித்த இந்தக் குறும்படம் 2018-ஆம் ஆண்டு வெளியானது.

Advertisment

ll

32 நிமிடங்களைக்கொண்ட இந்தக் குறும்படத்தின் கதை- ஒரு மேற்கோளால் ஈர்க்கப் பட்ட சிறுவன், தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்துகொண்டு, தனது வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் இறங்குகிறான் என்பதே. இந்தக் குறும்படத்தில் ராஜீவ் சக்சேனா, தைரியா தர்ஜி, தேவ் மோடி, தீப்தி அவ்லான் மற்றும் கின்னஸ் பக்ரு ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் 'சலோ ஜீத் ஹைன்' குடும்ப நலன்கருதிய சிறந்த குறும்படத்திற்கான தேசியவிருது பெற்றுள்ளது.

இந்த வெற்றியைப் பகிரும் வகையில், இந்தக் குறும்படத்தைத் தமிழகத்தில் திரையிடுவதற்கு பெரும் பங்களித்த "டிவோ' நிறுவனம், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் குழந் தைப் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இக்குறும்படத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்க "லைகா' சுபாஷ்கரன் ரொம்பவே லைக் பண்ணுகிறாராம்.