Advertisment
/idhalgal/cinikkuttu/ladies-bazaar

"யூ டர்ன்' அடிக்கும் சமந்தா

samantha

திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலான நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலையில் நடிகை சமந்தா மட்டும் விதிவிலக்காக இன்னமும் முன்னணி கதாநாயகியாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான "ரங்கஸ்தலம்', "இரும்புத்திரை', "நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்ததே இதற்குக் காரணம். இதையடுத்து சமந்தா நடிப்பில் "சீமராஜா', "சூப்பர் டீலக்ஸ்' மற்றும் "யூ-டர்ன்' படங்கள் அடுத்தடுத்து வெளியாகக் காத்திருக்கின்றன. இதில் "யூ-டர்ன்' படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகிறது. இதைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டும் சமந்தாவின் அடுத்த படத்தை "அர்ஜுன் ரெட்டி' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாயா இயக்குவதாகவும், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் படப்பிடிப்பு வெளியாகியுள்ளன. "சமந்தா டைவர்ஸ்?'ங்கிற "சினிக்கூத்து' சேதி உண்மையாயிரும்போல.

Advertisment

நெசமா வரலட்சுமி...?

varalakshmi

வரலட்சுமி காட்ல மழைதான்போல. இப்போ அவர் கையில் ஒன்பது படங்கள் இருக்காம். "வெல்வெட் நகரம்' படத்தின் டைரக்டர் மனோஜ்குமார் நடராஜனை வரலட்சுமிக்கு முன்னரே தெரியுமாம். அவரோடு ஒரு புராஜெக்ட் செய்யவேண்டியது தள்ளிப்போய், இப்போது மீண்டும் அவர் கொண்டுவந்த ஸ்கிரிப்ட் பிடித்

"யூ டர்ன்' அடிக்கும் சமந்தா

samantha

திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலான நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலையில் நடிகை சமந்தா மட்டும் விதிவிலக்காக இன்னமும் முன்னணி கதாநாயகியாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான "ரங்கஸ்தலம்', "இரும்புத்திரை', "நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்ததே இதற்குக் காரணம். இதையடுத்து சமந்தா நடிப்பில் "சீமராஜா', "சூப்பர் டீலக்ஸ்' மற்றும் "யூ-டர்ன்' படங்கள் அடுத்தடுத்து வெளியாகக் காத்திருக்கின்றன. இதில் "யூ-டர்ன்' படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகிறது. இதைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டும் சமந்தாவின் அடுத்த படத்தை "அர்ஜுன் ரெட்டி' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாயா இயக்குவதாகவும், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் படப்பிடிப்பு வெளியாகியுள்ளன. "சமந்தா டைவர்ஸ்?'ங்கிற "சினிக்கூத்து' சேதி உண்மையாயிரும்போல.

Advertisment

நெசமா வரலட்சுமி...?

varalakshmi

வரலட்சுமி காட்ல மழைதான்போல. இப்போ அவர் கையில் ஒன்பது படங்கள் இருக்காம். "வெல்வெட் நகரம்' படத்தின் டைரக்டர் மனோஜ்குமார் நடராஜனை வரலட்சுமிக்கு முன்னரே தெரியுமாம். அவரோடு ஒரு புராஜெக்ட் செய்யவேண்டியது தள்ளிப்போய், இப்போது மீண்டும் அவர் கொண்டுவந்த ஸ்கிரிப்ட் பிடித்துப்போய் கையெழுத்துப் போட்டுட்டாராம்.

Advertisment

""இந்த ஆண்டு எனக்கு சந்தோஷமான ஆண்டு. சிலசமயம் சினிமா உலகம் நம்மை கண்டுக்காது. சிலசமயம் வாய்ப்புகளை அள்ளிவந்து கொட்டும். வாய்ப்புக் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கதாபாத்திரத்தை ஏற்பதற்குமுன், எனது கேரக்டருக்கு ஏற்ற காஸ்ட்யூமை போட்டுப் பார்த்து பிடித்திருந்தால்தான் ஓ.கே. சொல்கிறேன்.

டைரக்டர்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெளிவுபடுத்தத் தெரிந்தவர்களாக இருந்தால் நமது வேலை எளிதாகிவிடும். "தாரை தப்பட்டை'-யில் டைரக்டர் பாலா எதைக் கேட்டாரோ அதைக் கொடுக்க முடிந்ததால் பெயர் கிடைத்தது. பெண்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்க இப்போது சினிமா தயாராகி இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் நான் நடிக்கும் படத்தில் எனது கேரக்டரை ரசிகர்கள் பேசும்படியாக செய்வேன். அதற்காக நான் மெனக்கெடுவேன். சின்னதோ பெரியதோ, அது எதிர்மறையாக இருந்தாலும்கூட எனது கேரக்டரை ரசிகர்கள் பேசும்படி செய்வதே எனது நோக்கமாக இருக்கும். இப்போது நடிகைகளை நம்பி பணம் போட தயாரிப்பாளர்கள் முன்வந்திருப்பதே பெரிய விஷயம்தான். பெண்களைப் பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கும்படி சட்ட அமைச்சரிடம் மனு கொடுத்தோம். அதை முதல்வருக்கு அனுப்பியிருப்பதாக அவர் கூறுகிறார். ஆறு மாதங்களுக்குள்ளாவது ரிசல்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

அது சரி வரலட்சுமி, ஒங்க (மாஜியா, இப்பவும் இருக்காரான்னு தெரியல) லவ்வரும் ரெண்டு சங்கத் தலைவருமான விஷால் பேச்சைக் கேட்காம ஒரு ஃபங்ஷன்ல கலந்துக்கிட்டீகளாமே நெசமா?

அடுத்து கமல்ஹாசனின் "ராஜபார்வை' டைட்டிலில் கண்தெரியாத போலீஸ் அதிகாரியாக நடிக்கிறீகன்னு சொல்லிக்கிட்டாகளே அதுவும் நெசமா?

வரலட்சுமி...

ஸ்ருதி நெக்ஸ்ட்

sruthi

தனது நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் "த மஸ்கிட்டோ பிலாஸபி' என்னும் படத்தை தயாரித்து வெளியிடுகிறார்

நடிகை ஸ்ருதிஹாசன். இதனை "லென்ஸ்' படப் புகழ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

குறைவான கதாப்பாத்திரங்களை வைத்துக்கொண்டு, தேவையான கருவிகளின் உதவியை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, எளிமையான பாணியில் கதையைச் சொல்வதில் தேர்ச்சி பெற்றவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். ஸ்ருதியின் படத்திலும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு உச்சபட்ச எளிமையான கதை சொல்லும் பாணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.

""இந்தப் படத் தயாரிப்பின்போது, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான, தன்னிச்சையான அதிகாரத்தை உணரமுடிந்தது. இதனால் சிறிய தருணங்கள்கூட உண்மையுடன்கூடிய உயிர்ப்புள்ளதாக்கியது'' என்கிறார் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

தயாரிப்பாளரான நடிகை ஸ்ருதிஹாசன் ""எங்கள் நிறுவனமான இஸிட்ரோ, எப்போதும் புதுமையான சுவாரசியமான உள்ளடக்கங்களைத்தான் நம்புகிறது. இது பல்வேறு ஆக்கப்பூர்வமான வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் உலகத்தரத்திலான கதை சொல்லலையும் இது கொண்டிருக்கிறது'' என்கிறார்.

""துபாய்க்கு போய்ருவேன்''

nivetha

நிவேதா பெத்துராஜ் "ஜெயம்'ரவியுடன் ஜோடிபோட்ட "டிக் டிக் டிக்' படம் ரிலீசாகியுள்ளது. இதையடுத்து இவர் நடிப்பில் "பார்ட்டி', "திமிரு பிடிச்சவன்', "ஜெகஜால கில்லாடி' ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. தன் சினிமா கேரியர் குறித்து நிவேதா பெத்துராஜ் மனம் திறந்து பேசியபோது...""பிறந்தது மதுரை என்றாலும் துபாயில்தான் வளர்ந்தேன். இப்போதும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மதுரை சென்றுவிடுவேன். அழகிப் போட்டியில் என்னை பார்த்துவிட்டு முதல் படவாய்ப்பு வந்தது. ஒன்றிரண்டு படங்கள் அனுபவத்திற்காக நடித்துதான் பார்ப்போமே என்று வந்தேன். முழுநேர நடிகையாகிவிட்டேன். சினிமாவில் இயக்குனராக ஆசை வந்துள்ளது. ஓவியம் வரைவேன். கார் நன்றாக ஓட்டுவேன். பந்தயங்களில்கூட கலந்துகொண்டுள்ளேன். சினிமாவில் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன். சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டால் துபாய்க்கே சென்றுவிடுவேன்"" என்றார் நிவேதா.

கௌப்பி விட்றாதீக

arthana

"தொண்டன்' மூலம் அறிமுகமாகி "செம' படத்தின்மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அர்த்தனாவுடன் ஒரு அளவலாவல்.

""சின்ன வயசிலிலிருந்தே நடிப்பு எனக்குப் பிடிச்ச விஷயம். அப்பா-அம்மா நான் எல்லாரும் திருவனந்தபுரம்தான். படிச்சது எல்லாமே அங்கதான். நான் அப்பா- அம்மா செல்லம். ஸ்கூல் படிக்கும்போதே டிராமா, கல்ச்சுரல் எல்லாத்தி லும் நடிப்பேன். ஸ்கூல் முடிக்கும்போதே நான் டிவியில் தொகுப்பாளராகிவிட்டேன்.

காலேஜ்ல விஸ்காம் முடிச்ச பின்னாடி ஒரு மலையாளப் படத்துல சுரேஷ் கோபி சார் கசினுக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதற்குப்பிறகு ஒரு தெலுங்குப்படம் பண்ணினேன்.

அப்புறம்தான் சமுத்திரக்கனி சார் மூலமா "தொண்டன்' படம் வாய்ப்பு கிடைத்தது.

இப்ப தமிழில் மூணு படங்கள் பண்ணிட்டேன்.

மூன்று மொழிகளில் படம் பன்ணிட்டீங்க. எந்த இன்டஸ்ட்ரி உங்களுக்குப் பிடிச்சிருக்கு?

அப்படி எதுவும் இல்லை. நானே ரொம்ப சின்னப் பொண்ணு. சினிமாவுக்கு புதுசு. என்ன மாட்டிவிடாதீங்க..

"செம'-யில் ஜி.வி. பிரகாஷுடன் நடித்த அனுபவம்?

ஜி.வி. பிரகாஷ் ரொம்ப நல்ல மனிதர். "செம' படம்மூலமா கிடைச்ச வாய்ப்புதான் "கடைக்குட்டி சிங்கம்.' அதுல நான் மூணு ஹீரோயின்ல ஒருத்தரா பண்றேன்.

படத்தில் மூணு ஹீரோயின். ஈகோ, சண்டைகள் எதுவும் வரலையா?

எனக்கு எப்பவும் வராது. யார் என்ன பண்ணினாலும் நம்ம வேலையை கரெக்ட்டா பண்ணிட்டா எந்தப் பிரச்சினையும் இல்ல. நான் ரொம்ப அமைதி.

எனக்கு எப்பவும் ஒரு நல்ல நடிகையா பேர் எடுக்கணும்.

அதனால ஈகோ, சண்டைனு கௌப்பிவிட்றாதீங்க ப்ளீஸ்'' என்றார்.

ஓ.கே. கூல்டவுண்... கூல்டவுண்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe