எல்லாரும் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது "சிறகு.'
"மெட்ராஸ்', "கபாலி', "வடசென்னை', "சண்டைக்கோழி-2', "பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள்மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத் திலும், யோகாவிலும் சிறந்த அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agathia.jpg)
டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .
காட்சிகளை கண்களுக்குக் குளுமையாக ஒளிப்பதிவு செய்திருக்கும் ராஜா பட்டாச் சார்ஜி "பியார் பிரேமா காதல்' படத்தின் அறிமுகமானவர்.
இசை- அரோல் கொரேலி, படத்தொகுப்பு- அருண்குமார் .வி.எஸ். திரைப்படத்துறையில் அனுபவம்மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ்மூலம், "சிறகு' தயாரித்துள்ளார்.
கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-06/agathia.jpg)