எஃப் எம் கலைக்கூடம் சார்பாக எஸ். நாராயணன் மற்றும் எஸ். சரவணகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படத்தில், நாயகனாக கிஷோர் அறிமுகமாக, இணையாக சஸ்வதா நடிக்கிறார். இவர்களுடன் கே. பாக்கியராஜ், ரேகா, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் பி.என்.சி. கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

Advertisment

பி.என்.சி. கிருஷ்ணா தனது திரைத்துறைப் பயணத்தை நாடக மேடைகளில் துவங்கி, திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் இயங்கிவருகின்ற ஒரு படைப்பாளி.

Advertisment

kk

சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வைப் பற்றிய உணர்வுப் பூர்வமான கதைதான் "குஸ்கா.' மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குநர் மிகவும் நளினமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகியிருக்கிறது.

எம்.எஸ். ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ஜி. ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குநராக கே கலை நடராஜ் பங்காற்றி இருக்கிறார்.

சண்டைக்காட்சி ஓம் பிரகாஷ், ஸ்டில்ஸ் கே.பி. பிரபு, நடனம் ஜே.ஜே சந்துரு, வடிவமைப்பு கம்பம் சங்கர்.