2012-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு, லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான "கும்கி' படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
""ஆறு ஆண்டுகளு
2012-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு, லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான "கும்கி' படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
""ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் "கும்கி 2' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது. மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாக வில்லை. டைட்டில் கதாபாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. தயாரிப்பு- பென் இந்தியா லிமிடெட் ஜெயந்திலால் காடா.
படம் பற்றி இயக்குனர் பிரபு சாலமன் """கும்கி 2' பிரம்மாண்டமான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல்தான் "கும்கி 2.'
குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்து, கடைசியா தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த "கும்கி 2' இருக்கும்'' என்கிறார்.