தெலுங்கு அப்பாவுக்கும் சீனா அம்மாவுக்கும் பிறந்தவர் ஜுவாலா கட்டா. அடிப்படையில் பேட் மிட்டன் வீராங்கனையாக இருந் தாலும், சர்ச்சைகள் மற்றும் தனது கவர்ச்சி விளையாட்டுகளால் மட்டுமே பெரிதும் அறியப்பட்டவர். சேட்டன் ஆனந்த் என்ற பேட்மிட்டன் வீரரைத் திருமணம் செய்த ஜுவாலா, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அசாருதீனுடன் சேர்த்து வைத்துப் பேசப்பட்டார்.
அசாருதீன் தனது மனைவி சங்கீதாவைவிட்டுப் பிரிந் ததே ஜூவாலாவுக்காகத் தான் என்ற ஒரு டாக்கும் ஓடியது. இன்னொருபுறம், சேட்டன் ஆனந்துடனான உறவை முறித்துக் கொண்ட ஜுவாலா, அசாருதீனின் மகனோடும் ஒரு ரவுண்டு வந்தார். பிறகு சினிமாமீதான மோகத்தில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க அவர் எடுத்த முயற்சிகள் கைகொடுக்க வில்லை. ஒரேயொரு தெலுங்கு படத்தில் மட்டும் அட்மாஸ்பியரைக் கவர் செய்யும் கேரக்டரில் வந்து போனார்.
இதற்கிடையே பார்ட்டி ஒன்றில் நடிகர் விஷ்ணு விஷாலைச் சந்தித்து ஒரு லிங்கை ஏற்படுத்திக் கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான கே. நட்ராஜின் மகளை (அவர் பேரும் ரஜினிதான்) விஷ்ணு விஷால் கல்யாணம் செய்தார். இந்தத் திருமணம் நடந்த சில மாதங்களிலேயே விஷ்ணு விஷாலின் வாழ்க்கையில் நுழைந்தார் ஜுவாலா. இந்த செய்திகள் கிசுகிசுக்களாக வெளிவந்தபோது அதை மறுத்த விஷ்ணு விஷால், ஒருகட்டத்தில் ரஜினியை விவாகரத்து செய்தார்.
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்காமலே தனியாக ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் அளவுக்கு முன்னேற ஜுவாலாவின் பொருளாதார உதவிகள் பெரிதும் கைக் கொடுத்திருக்கிறது விஷ்ணு விஷாலுக்கு. அப்படி "கவரிமான் பரம்பரை' என்ற பெயரில், ஒரு படத்தை விஷ்ணு விஷால் தனது பேனரில் தயாரிக்க, திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட இடங் களில் ஷூட்டிங் போய்க் கொண்டிருந் தது. அப்போதே மதுரையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டுக்கொண்டு, இந்தப் படத்தின் தயாரிப்புப் பிரிவின் கணக்கு வழக்குகளைக் கவனித்துவந்தார் ஜுவாலா. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அடிக்கடி வந்து போன தை, பத்துமாதங் களுக்கு முன்பே "விஷ்ணு விஷாலின் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் வடமாநிலப் பெண்!' என்று "சினிக்கூத்து' எழுதி இருந்தோம்.
இடையே ஏற்பட்ட சில பிரச்சினைகளால் "கவரிமான் பரம்பரை' படத்தை பாதியிலேயே கைவிட்டார் விஷ்ணுவிஷால். இந்தப் படத்தின்மூலம் தன் மகள் ஷிவானி ராஜசேகருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல என்ட்ரி கிடைக்கும் என்று நம்பியிருந்த தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர்- ஜீவிதா தம்பதிகளின் கனவிலும் மண் விழுந்தது.
இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஒரு புரொடியூசர் அந்தஸ்தில் கால்பதித்து விடவேண்டும் என்ற தனது எண்ணத்தை ஜுவாலா விடவில்லை. அதேசமயம், டிஐஜியாக இருந்த ரமேஷ் குடவாலாவின் மகன் என்பதால், விஷ்ணு விஷாலை வளைத்துப்போடுவது எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருக்கும் என்ற அவரின் கணக்கும் பொய்த்துப் போகவில்லை.
இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட விஷ்ணு விஷால், ஜூவாலாவிடம் இருந்து இதுவரை ஏழு கோடி ரூபாய்வரை கறந்துவிட்டாராம். இந்நிலையில்தான், இதுவரையில் வெறும் கிசுகிசு செய்தியாக இருந்ததை, "நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களுக் குள்ள வேற எதுவும் இல்லை!' என்று மழுப் பிவழக்கம்போல மறக் கடித்தார். இப்போது பகிரங்கமாகவே முத்தம்கொடுக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, புத்தாண் டையும் தொடங்கி விட்டார்கள் இருவரும்!
கோலிவுட்டுக்கு ஒரு குளுகுளு, கிளுகிளு தயாரிப்பாளர் வந்திறங் கிவிட்டார்!
-மூன்கிங்