Advertisment

ஜோசிரியரின் பிடியில் கோலிவுட்!

/idhalgal/cinikkuttu/kollywood-joshiyars-grasp

கில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இவர் "இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடன் இந்தியா மோதும்..

Advertisment

அதேசமயம் தோற்க நேரிடும்' என்று கடந்த ஜனவரி 1-ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்... (அப்படியா?)

Advertisment

dd

மேலும் "இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந

கில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இவர் "இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடன் இந்தியா மோதும்..

Advertisment

அதேசமயம் தோற்க நேரிடும்' என்று கடந்த ஜனவரி 1-ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்... (அப்படியா?)

Advertisment

dd

மேலும் "இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள்'தான் செமிபைனலுக்கு தகுதிபெறும்' என்றும், "இந்த 2019 ஆண்டு உலகக்கோப்பையை இதுவரை உலகக்கோப்பையை ஜெயிக்காத புதிய அணியே வெல்லும்' என்றும் சொல்லி இருந்தார்.

(அட அப்படியா?)

""இந்தத் தொடரில் "மேன் ஆப் தி சீரிஸ்' நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான்'' என அவர் ஆணித்தரமாக சொன்னதும் பலித்துள்ளது. (இங்கபார்டா...)

அதேபோல, "இறுதிப் போட்டியில் நியூசிலாந்து கோப்பையைக் கைப்பற்றும்' என்றும் கூறியிருந்தார்.. கிட்டத்தட்ட இவரது கணிப்புக்கு மிக நெருக்கத்தில் வந்த வெற்றி கடைசி நேரத்தில்தான் நூலிழையில் கைமாறி போயிருக்கிறது. (அட ஆமால்ல...)

அதுமட்டுமல்ல, கடந்த ஒரு வருட காலமாக பல விஷயங்களில் இவர் கூறிய கணிப்புகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.. பெரும்பாலான கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன. "ஆர்யாவுக்கு இந்த வருடம் திருமணம் (சயீசா வுடன்னு சொல்லல) ஆகும்' என சொன்னது, "விஷால் வரலட்சுமி யைத் திருமணம் செய்யமாட்டார்' என சொன்னது, "ரஜினி- ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள்' என சொன்னது, "ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார்' என சொன்னது, "மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார்' என சொன்னது என அனைத்துமே நூறு சதவிகிதம் அப்படியே பலித்துள்ளதால், யாருய்யா இந்த பாலாஜி ஹாசன் என உலகமே கிறுகிறுத்துப்போய் கிடக்கிறது. (நமக்கும் கிறுகிறுப்பு வந்துடுச்சு.)

இவரது துல்லியமான கணிப்புகளைக் கண்டு நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை ஷில்பா ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பாகிஸ்தான் வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலர் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்துள்ளனர்.

ஆமா ஜோசியரே... இந்த வாரம் ரிலீசாகும் படங்கள்ல இது ஓடும், இது ஓடாதுன்னு இந்திய லெவல்ல உங்களால கரெக்டா கணிச்சு சொல்ல முடியுமா...? சொல்லித்தான் பாருங்களேன்...!

cine300719
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe