Advertisment

கோலிவுட்! சட்டை கிழியாத சண்டைகள்! சண்டை-1

/idhalgal/cinikkuttu/kollywood-fight-1

மிழ்நாடு சட்டசபைக்கு நடக்கும் பொதுத்தேர்தல்போல பரபரப்பாகிவிட்டது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல். மூன்று வருடங்களுக்குமுன்பு நடந்த நடிகர் சங்கத் தேர்தலும் இதே பரபரப்புடன்தான் நடந்தது. மொத்தம் இருக்கும் இரண்டாயிரத்து சொச்ச ஓட்டுக்களில் 1,600 ஓட்டுக்கள்தான் பதிவானது.

Advertisment

அந்த ஓட்டுக்களில் லீடிங் யார் என விடியவிடிய லைவ் போட்டன டி.வி. மீடியாக்கள்.

Advertisment

kk

கடந்த முறை விஷால் தலைமையிலான பாண்டவர் அணி, சரத்- ராதாரவி தலைமையிலான அணியைத் தோற்கடித்து சங்க நிர்வாகத்தைக் கைப்பற்றியது. விஷால் தலைமையிலான அணியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியே நடிகர் சங்க நிலத்தை மீட்டு, புதிய கட்டடம் கட்டுவது, நலிலிவடைந்த கலைஞர்களூக

மிழ்நாடு சட்டசபைக்கு நடக்கும் பொதுத்தேர்தல்போல பரபரப்பாகிவிட்டது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல். மூன்று வருடங்களுக்குமுன்பு நடந்த நடிகர் சங்கத் தேர்தலும் இதே பரபரப்புடன்தான் நடந்தது. மொத்தம் இருக்கும் இரண்டாயிரத்து சொச்ச ஓட்டுக்களில் 1,600 ஓட்டுக்கள்தான் பதிவானது.

Advertisment

அந்த ஓட்டுக்களில் லீடிங் யார் என விடியவிடிய லைவ் போட்டன டி.வி. மீடியாக்கள்.

Advertisment

kk

கடந்த முறை விஷால் தலைமையிலான பாண்டவர் அணி, சரத்- ராதாரவி தலைமையிலான அணியைத் தோற்கடித்து சங்க நிர்வாகத்தைக் கைப்பற்றியது. விஷால் தலைமையிலான அணியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியே நடிகர் சங்க நிலத்தை மீட்டு, புதிய கட்டடம் கட்டுவது, நலிலிவடைந்த கலைஞர்களூக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குவது என்பதுதான். இந்த இரண்டையுமே கிட்டத்தட்ட நிறைவேற்றிய தெம்பில் மீண்டும் களம் காண்கிறது விஷால் அணி. ஆனால், சென்ற முறை விஷால் தலைமையிலான அணியில் பல்வேறு பதவி களுக்கு போட்டியிட்ட நடிகர்கள் பலர் அணிதாவி, கே. பாக்யராஜ் தலைமை யிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியில் இப்போது போட்டியிடுகிறார்கள்.

காரணம் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் விஷால் பண்ணிய ஏறுக்குமாறான சேட்டைகள் தான். ஆனால் கார்த்தி, குஷ்பு, கோவை சரளா, கருணாஸ், நந்தா, மனோபாலா போன்ற முன்னணி நடிகர்கள் நாசர்- விஷால் பின்னே அணிவகுத்து போட்டி யிடுகிறார்கள்.

kkk

kk

பாக்யராஜோ, ""இன்னும் ஆறு மாதத்தில் நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடிப்பேன்'' என்கிறார். ""நாங்க கட்டி முடிச்சிருப்போம்... நீங்க வந்து பால் காய்ச்சுவீங்களா?'' என கேட்கிறது விஷால் தரப்பு. கே. பாக்யராஜ் அணிக்கு சகல விதத்திலும் உதவியாக இருப்பவர் பசைப் பார்ட்டியான ஐசரி கணேஷ்தான். விஷாலுக்கு எதிராக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேசின் கரன்சியும் தாராள மாக பாய்கிறது. "ஓட்டுக்கு ரூபாய் கொடுப்போம்' என பாக்யராஜ் சொன்னது ஐசரி கணேஷ் இருக்கும் தைரியத்தில்தான்.

விஷாலை முந்திக்கொண்டு விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது பாக்யராஜ் அணி. ரஜினி ஆதரவு தங்களுக்குத்தான் என்கிறது சங்கரதாஸ் சுவாமிகள் டீம். "ரஜினியும் கமலும் பேரும் ஓப்பனாக சொல்லும்வரை வதந்தியை பரப்பாதீர் கள்' என்கிறது பாண்டவர் டீம். சரத்- ராதாரவி தலைமையில் சங்க நிர்வாகம் இருந்தபோது காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகேயுள்ள வேங்கடவலம் கிராமத் தில் 26 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. பொதுக்குழு, செயற்குழு அனுமதியில் லாமல் அந்த நிலத்தை சரத்தும் ராதாரவியும் விற்றுவிட்டார்கள் என புதிதாகப் பொறுப்பேற்ற விஷால் போலீசில் புகார் செய்தார், கோர்ட்டிலும் வழக்குத் தொடர்ந்தார்.

kk

அந்த நிலம் சம்பந்தமான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விஷாலுக்கு சம்மன் அனுப்பி பல மாதங்கள் ஆகிவிட்டன. இத்தனை மாதங்கள் இழுத்தடித்த விஷாலோ, கரெக்டாக இந்த நேரம் பார்த்து காஞ்சிபுரம் க்ரைம் பிராஞ்சில் ரெக்கார்டுகளைத் தாக்கல் பண்ணி விட்டார்.

இதென்னடா புது சோதனை...? என நினைத்த ராதாரவியோ, முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க. வில் ஐக்கியமாகிவிட்டார். அத்தோடு விட்டாரா...? ""நடிகர் சங்கத் தேர்தலிலில் தி.மு.க.வின் தலையீடு இருக்கிறது'' என கொளுத்திப் போட்டார். ""அது ராதாரவியின் சொந்தக் கருத்து, நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் இல்லை'' என்கிறார் ஐசரி கணேஷ். ""ஆளும் கட்சியின் தூண்டுதல் இருக்கு'' என்கிறார் விஷால்.

kk

ஜூன் 23-ஆம் தேதி ஓட்டுப் பதிவுவரைக்கும் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறதோ?

லேட்டஸ்ட் ட்விஸ்ட் என்னன் னா... விஷால்மீது ஏடாகூட புகாரைக் கிளப்பி, நடிகர் சங்கத் தேர்தலையே ரத்து பண்ணும் சான்ஸ் இருக்கா என ஆராய்ச்சி பண்ணுகிறாராம் ராதாரவி.

cin250619
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe