முதல் சீனிலேயே லவ்

danush

Advertisment

வெற்றி + தனுஷ் கூட்டணியில் உருவாகி 17-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் "வடசென்னை' பிரஸ்மீட் பேச்சுக்கள்...

தனுஷ்

""வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. "வடசென்னை' அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம்.

ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.''

வெற்றிமாறன்

""படத்திற்கு "ஏ' சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சியும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.''

ஐஸ்வர்யா ராஜேஷ்

Advertisment

""தனுஷ் அவர்களுடன் முதன் முதலாக ஜோடியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் பார்த்தவுடன் என்னை லவ் பண்ணுவார் தனுஷ்.''

ஆன்ட்ரியா

""படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. .இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன்''

"சின்ன மச்சான்'

senthilganesh

Advertisment

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக ""சின்ன மச்சான் செவத்த மச்சான்'' என்ற பாடலைப் பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ்- ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா.

அதற்குப் பிறகு இந்த பாடல் "சார்லி சாப்ளின்-2' படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப் பட்டது. யூ டியூப்பில் இன்றுவரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு "கரிமுகன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார் கள். செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். காயத்ரி என்ற கேரள பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.

யோகிராம், பாவா லட்சுமணன், விஜய் கணேஷ், வின்சென்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா. செந்தில் இவர்களுடன் இயக்குநர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விமல் புரொடக்ஷன்ஸ் சார்பாக ப. சித்திரைச்செல்வி, செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ். கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் செல்ல தங்கையா.

"சர்வம் தாளமாயம்'

shooting

"மின்சார கனவு',

"கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்' வெற்றிப் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் "சர்வம் தாள மயம்' படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு மிருதங்க வித்வானிட மிருந்து கலையைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.

இன்றைய காலகட்டத்தில் சாதி, மதப் பிரச்சினைகளைத் தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை.

ஜீ.வி. பிரகாஷ், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், டி. டி. உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'

"கேளடி கண்மணி', "ஆசை', "நேருக்கு நேர்', "பூவெல்லாம் கேட்டுப்பார்', "சத்தம் போடாதே' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் வசந்த், எஸ். சாய். தற்போது "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது ஜியோ ஙஆஙஒ மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த் சாய்யின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரையிடத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

"கேம் ஓவர்'topsi

"இறுதி சுற்று', "விக்ரம் வேதா', "தமிழ்படம் 2' வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தயாரிப்பு நிறுவனம் "ஒய் நாட்' ஸ்டுடியோஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து "கேம் ஓவர்' எனும் புதிய படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

நயன்தாரா நடிப்பில் உருவான "மாயா' (2015) வெற்றிப் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.

டாப்ஸி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.