அரவிந்த்சாமி + ராஜபாண்டி!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aravindsamy_0.jpg)
பட எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை... நல்ல படம், தரமான கதைக்களம், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி...
அப்படி சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து ஒத்துக்கொண்டது வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு படம்.
"என்னமோ நடக்குது', "அச்சமின்றி' போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.
செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் கமிட்டாகியுள்ளார்.
சரத்தும் இனியாவும்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sarath_0.jpg)
"வேளச்சேரி துப்பாக்கிச் சூடு' படத்தில் சரத்குமாருடன் ஜோடி சேர்கிறார் இனியா. படத்தில் அவருக்கு மனைவியாக வருகிறாராம். என்கவுன்டர் ஸ்பெஷலிலிஸ்ட்டான சரத்தின் மனைவி இனியா மனித உரிமைக்குழு உறுப்பினராம். அப்படின்னா சண்டை இருக்கத்தானே செய்யும்! தமிழகத்தை கலக்கும் வெளிமாநில ரவுடிகளை சரத் போட்டுத்தள்ளுகிறாராம். படப்பிடிப்பில் தனக்கு ரொம்ப உதவியாக இருப்பதாக சரத்தைப் புகழ்கிறார் இனியா.
"களவாணி சிறுக்கி'
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalavani0.jpg)
ராணா கிரியேஷன்ஸ் அம்மன் டெக்ஸ் ஆர். நமச்சிவாயம் தயாரிக்கும் படம் "களவாணி சிறுக்கி.'
இதில்

இதில் சாமி, திவாகர், சங்கர்கணேஷ் மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சுகிரிட்டி அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர்- ரவி ராகுல். இவர் "ஆத்தா உன் கோவிலிலே', "மிட்டா மிராசு', "தமிழ்பொண்ணு', "மாங்கல்யம் தந்துனானே' உட்பட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.
""ஒரு பெண் ஒரு ஆணிடம் பழகுறவிதம், நல்லவிதமாகவும் எடுத்துக்கொள்ளப்படும் அல்லது தவறானவிதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். அது அவரவர் புரிந்துகொள்கிற மனப்பக்குவத்தைப் பொருத்தது.
கிராமத்தில் இருக்கிற பெண் ஒருத்தி ஒரு வாலிபனிடம் எதார்த்தமாகப் பழகுகிறாள். ஆனால் அவன் அதை தவறாக நினைத்து அவளிடம் தப்பாக நடக்க முயல்கிறான். இறுதியில் அவன் நினைத்தது நடந்ததா, இல்லை என்னென்ன பிரச்சினைகளை அவன் சந்தித்தான் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.' என்கிறார் ரவி ராகுல்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா முதன் முறையாக ஈரோட்டிலுள்ள சீனிவாசா திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இசையை வெளியிட்டார்.
"பார்த்திபன் காதல்'
எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் "பார்த்திபன் காதல்.' இந்தப் படத்தில் யோகி கதாநாயகனாகவும் கதாநாயகியாக வர்ஷிதாவும் அறிமுக மாகிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது.
படம் பற்றி இயக்குநர் வள்ளிமுத்து கூறும்போது...""உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவியக் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.
இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்துக் கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் காமெடிப் பேய்ப் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலிலில் "பார்த்திபன் காதல்' ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது. கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது'' என்றார்.
"கூத்தன்"
நீல்கிரீஸ் ட்ரீம் என்டர்டெயின்மென்ட் பேனரில் முருகன் தயாரிக்கும் புதிய படம் "கூத்தன்.'
சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாகக்கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஏ.எல். வெங்கி.
அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபுதேவா தம்பி நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜுனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு பட்டாளமே நடிக்கிறது.
ஷூட்டிங் முடிந்து திரைக்கு வருவதற்கான மும்முரமான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக் கின்றன.
தயவு செய்து படம் எடுக்காதீங்க!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nazar.jpg)
"வெடிகுண்டு பசங்க' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கள் எஸ்.பி. முத்துராமன், கே. பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ், நடிகை மானு ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இந்த விழாவில் நடிகர் நாசர் பேசும்போது, "" "வெடிகுண்டு பசங்க' படத்தின் வரவு அவசியமான ஒன்று. மலேசிய வாழ் தமிழர்கள் எப்போதுமே, தமிழ்த் திரையுலகினருக்குப் பெரும் பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள். சினிமாதான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள் கொடியாக இருக்கிறது. அங்கிருந்து இதுபோல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர வேண்டும். முக்கியமாக அவையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அங்கிருக் கும் வாழ்வியலைப் பிரதிபலிப்பவையாகவும் இருக்கவேண்டும். இங்கிருக்கிற கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்து உருவாகிற தமிழ் சினிமாக்களைப் பார்த்து தயவுசெய்து, படம் செய்யாதீர் கள். உங்களுடைய கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்த படங்களை உருவாக்குங்கள். அதைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jannai.jpg)
இயக்குநர் கே. பாக்யராஜ், ""அவ்வளவு பெரிய ஆஸ்ட்ரோ நிறுவனம், ஜனனி பாலுவை நம்பி இந்த "வெடிகுண்டு பசங்க' படத்தை ஒப்படைத்திருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இப்படத்தின் கதாநாயகன் தினேஷ்குமார் எனக்கு வராத ஒன்றை மிகவும் நன்றாக செய்திருக்கிறார்.
அதுதான் நடனமாடுவது.
இங்கு தலைப்பு பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசினார்கள். முறையாகப் பதிவுசெய்யப்பட்ட தலைப்புகளை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக போடவேண்டும்.
அப்படிச் செய்யும் பட்சத்தில் தலைப்பு விசயத்தில் நடக்கிற கமிஷன் சமாச்சாரங்களைக் கட்டுப்படுத்தலாம்.
இப்போதிருக்கும் சினிமா சூழலில் நூறு நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லை. திருட்டு விசிடி, இணையத் திருட்டு போன்றவற்றைத் தாண்டியும், படம் தரமானதாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக வெற்றிபெறும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியாக தரமான படைப்பா கவே இருக்கிறது. எனவே இந்த "வெடிகுண்டு பசங்க' வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துகிறேன்'' என்றார்.
"வெடிகுண்டு பசங்க' படத்தை ஜனனி பாலு தயாரிக்க, பெண் இயக்குநரான டாக்டர். விமலாபெருமாள் டைரக்ட் பண்ணியுள்ளார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us