வெல்வெட் நகரம்

varalaskhmi

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் "வெல்வெட் நகரம்.' இதில் முதன்முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், "துருவங்கள் பதினாறு' புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.

Advertisment

""கதாநாயகிக்கு முக்கியத் துவமுள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்குமுன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மைச் சம்பவங்களைத் தழுவி ஆக்ஷன் திரில்லராக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவதுபோல் விறுவிறுப்பாக அமைக்கப் பட்டிருக்கிறது.

Advertisment

இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிகையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழுப் பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்ஷன் கலந்துசொல்லும் படமாக "வெல்வெட் நகரம்' இருக்கும்'' என்கிறார் டைரக்டர் மனோஜ் குமார் நடராஜன்.

தாராவியில்...

tharavi

எந்த புதுமுக நடிகருக்கும் கிடைக்காத பெருமை, "பியாண்ட் த க்ளவுட்ஸ்' என்ற படத்தின்மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்கு கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவதுதான். அதனைப் பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார்.

Advertisment

இந்தப் படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவி பகுதியில் சுற்றித்திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். பிரபலமானவராக இருந்தாலும், இந்தப் படத்தில் தாராவி பகுதியைச் சேர்ந்த பையனாக நடிக்கவேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்காக தாராவி பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆகாஷ் என்பவரை இயக்குநர் மஜீத் மஜீதி தேர்ந்தெடுத்து இஷானுக்கு நண்பராக நடிக்கவைத்திருக்கிறார். அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் படத்திலும் தோன்றியிருக்கிறார்கள்.