இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத், பாலிலிவுட் நடிகர் மற்றும் பாடகரான ஃபர்ஹான் அக்தரை முதன்முதலிலில் தென்னிந்திய மொழிகளில் பின்னணி பாட வைத்திருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஃபர்ஹான் அக்தர். இவர் முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான "பாரத் அனே நேனு' என்ற தெலுங்குப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsp_1.jpg)
""முதலில் சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தயாரான 1 நேநோக்கடுனே (1 Nenokkadine) என்ற படத்தில் இடம்பெற்ற Who are you... என்ற பாடலைத்தான் ஃபர்ஹான் அக்தர் பாடுவதாகயிருந்தது. ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் அவரால் பாட இயலவில்லை. அதனையடுத்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் "பாரத் அனே நேனு' என்ற படத்தில் இடம்பெற்ற "I Dont Know...' எனத் தொடங்கும் பாடலை ஃபர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அவரைத் தொடர்பு கொண்டேன். இந்த பாடலுக்கான மெட்டை நான் உருவாக்கும் போதே இந்த பாடலை ஃபர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்பினேன்.
அவரைத் தொடர்பு கொண்ட போது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பாடுகிறேன் என்றார். இருந்தாலும் அவர் தெலுங்கு மொழி உச்சரிப்பைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டேயிருந்தார். ஆனால் மும்பையில் இந்த பாடலை பதிவு செய்யும் போது அற்புதமாக பாடிக் கொடுத்தார்'' என்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishwa.jpg)
விஜயகாந்த் நடித்த "வல்லரசு', அர்ஜூன் நடித்த "அரசாட்சி', அஜீத் நடித்த "ஆஞ்சனேயா' மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த "இந்தியன்' போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர் மகாராஜன்.
இந்தியில் சூப்பர் ஹிட் ஆன "ஜோர்', "சாம்பியன்', "கிராந்தி' போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார்.
வரவேற்பு மிக்க கலைஞனாக கருதப்படும் மகாராஜன் தற்போது சன்னி டியோல் நடிக்க உள்ள "இந்தியன் 2' படத்தையும் இயக்க உள்ளார் இதைத் தொடந்து தனது மகன் விஸ்வநாத் மகாராஜன் நடிக்க உள்ள படத்தை பக்கா கமர்சியல் படமாக உருவாக்க உள்ளார் மகாராஜன்.
விஷுவல் கம்யூனிகேசன் படித்ததுடன் சினிமாவுக்கு தேவையான டான்ஸ், பைட் என முழுமையாக கற்றுத் தேர்ந்துள்ள மகனை வைத்து விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார் மகாராஜன்.
இலண்டனில் முதன்முறையாக அனிருத்
ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிருத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anirudh.jpg)
இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ளS S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த இசைநிகழ்ச்சி Gig Style Show பாணியில் நடைபெறவிருக்கிறது என்கிறது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/love.jpg)
ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் "தேவகோட்டை காதல்' என்ற படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
மற்றும் கஞ்சா கருப்பு, பாவாலட்சுமணன், தீப்பெட்டி கணேசன், கிளி ராமச்சந்திரன், மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன், மனோஜ் ,சலாம் ஸ்ருதி, ரஜினி முரளி, வத்சலா டீச்சர், சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள்
கதை - சீனு, திரைக்கதை - ஏ.ஆர்.கே. பி.பி.ஏ. ரஹ்மான், பாடல்கள் - காதல்மதி, இணை தயாரிப்பு - பீனா காசிம், வத்சலா டீச்சர், சபீனா. ஏ,ஆர். கே. டைரக்ட் பண்ணுகிறார். இவர் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் கூறியது...
""படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழை பையனுக்கும் ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் கலவரங்களும் தான் கதை முடிச்சு.
மதுரை, ஆலப்புழை மற்றும் பாலக்காடு அருகில் எம்.ஜி.ஆரின் உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது என்றார் இயக்குனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/anirudh-n.jpg)