ராஜ்கமல் இன்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சீயான் ddவிக்ரமின் "கடாரம் கொண்டான்' படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisment

லெனா

""கமல் சாருக்கு நன்றி. ராஜேஷ் எனக்கு மிக நல்ல ரோலை கொடுத்திருக்கிறார். சீயான் விக்ரம் அவர்களுடன் பணியாற்றியது லவ்லி அனுபவம்.''

Advertisment

அக்‌ஷ்ரா ஹாசன்

""அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கி றார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலை கொடுத்தார். ரொம்ப நன்றி.''

ராஜேஷ் எம். செல்வா பேசியதாவது,

""இந்தப் படத்தை கமல் சார் எனக் காகவே தயாரித்தார். விக்ரம் சாரோட வொர்க் பண்ணும்போது என் நண்பர்கள் எல்லாரிடமும் கேட்டபோது அவருக்குப் பிடித்துவிட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னதுபோலவே என்னை குழந்தை போலவே பார்த்துக்கொண்டார்.''

Advertisment

விக்ரம்

""ஏற்காட்டுல படிக்கும்போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத்தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். இந்தப்படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.''

ff

கமல்ஹாசன்

விக்ரம் சீயான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட்டிருக்கேன். "சேது' இன்னும் பல காலத்திற்கே முன்பே வந்திருக்க வேண்டும். "கடாரம் கொண்டான்' படத்தை விழாவில் கமலின் நெருங்கிய தோழியான பூஜாகுமாரும் கலக்கலான காஸ்ட்யூ மில் வந்து கலக்கினார்.