பொலிடிக்கல் பேக்ரவுண்ட் உள்ள ஹீரோ அவர். இவரின் சொந்தக் கம்பெனி தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடித்துவந்த இவர், இப்போது வெளிக்கம்பெனி படங்களிலும் நடிக்கிறார். பிறருக்கு உதவுவதிலும், கஷ்டப்படுவோரை கைதூக்கிவிடுவதிலும் மகிழ்ச்சி காண்பவர். இவரது மூன்று படங்களில் நம்பர் நடிகை ஹீரோயினாக நடித்தபோது, நடிகையையும் இவரையும் சேர்த்து கிசுகிசுத்தார்கள். ஆனால் அது உண்மையில்லை.

Advertisment

dd

ஆனால், இப்போது இதுதான் உண்மை. புதுமுக இயக்குநர் ஒருவர் டைரக்ட் பண்ணிய செம காஸ்ட்லி ஆபரணப் படத்தில் இவருடன் ஜோடி போட்டவர் அரபு நாட்டைச் சேர்ந்த நடிகை. ஒரு படத் தில்தான் நடித்திருந் தாலும் ஹீரோவுடன் ஃபெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டார் ஹீரோயின். பிரிக் கவே முடியாத அளவுக்கு அவர்களது ஒட்டல் இருப்பதால், ஈ.சி.ஆர். சாலையில் தனி வீடு, தனி செட்டப் என தூள் கிளப்புகிறது ஜோடி.

-நைட்மேன்