தி.மு.க.மீது மாறாத பற்றும் பாசமும் கொண்டவர். தெற்கத்தி தொகுதி ஒன்றின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மறைந்து விட்ட kisskissuஅவரது பேருக்கு இப்போதும் தயாரிப்பு சங்கத்தில் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரின் வாரிசும் அப்பா தொடங்கிய பேனரிலேயே படம் தயாரிக்க ஆரம்பித்தார். தளபதி நடிகரை வைத்து "மெகா' படம் எடுத் தார். படம் ஹிட் என்றாலும், டைரக்டர் வைத்த தெண்டச் செலவால் படத்தின் பட்ஜெட் எகிறியது, நஷ்டம் ஏறியது.

Advertisment

தயாரிப்பாளரின் கஷ்டத்தைப் பார்த்து, தளபதி நடிகரின் படத்தின் தமிழக விநியோக உரிமையை வழங்கி யது சேனல் நிறுவனம். அதிலும் அவர் செய்த ஏகப்பட்ட குளறுபடியால் கடுகடுப்பானது சேனல் நிர்வாகம். பொங்கலுக்கு ரிலீசாகியிருக்கும் சூப்பர் படம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் தயாரிப்பு பார்ட்டி. ஆனால் சேனலோ உதயமானவருக்கு ரிலீஸ் ரைட்சைக் கொடுத்துவிட்டது. இப்போது கையில் காசில்லாமல் ரொம்பவே சிரமப்படுகிறாராம் வாரிசு தயாரிப்பாளர்.

-நைட்மேன்