ரிலையன்ஸின் ஆயத்த ஆடைகள் விற்பனைப் பிரிவின் தமிழகம் மற்றும் தென்னிந்தியா விற்பனைத் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

keerthisuresh

ட்ரெண்ட்ஸ் பிராண்டுக்கான விளம்பரப் படத்தின் சூட்டிங்கில் அவர் கலந்துகொண்டார். இந்த விளம்பரப் படங்கள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ""தமிழ்நாட்டில் 61 ஷோ ரூம்களும் தென்னிந்தியாவில் 229 ஷோ ரூம்களும் இருப்பதால் கீர்த்தியை விளம்பரத் தூதராக நியமித்திருக்கிறோம்.

எங்கள் நுகர்வோருடன் வலுவான இணைப்பை ஏற்படுத்த கீர்த்தி சுரேஷ் உதவியாக இருப்பார். கீர்த்தியின் அழகும் திறமையும் ட்ரெண்ட்ஸை பாப்புலர் ஆக்க உதவும்'' என்று நம்புவதாக நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுதோ இல்லையோ, கீர்த்தியின் பேங்க் அக்கவுண்ட் எகிற ரொம்பவே உதவியாக இருக்கும்.

பின்ன முகúஷ் அம்பானி கம்பெனின்னா சும்மாவா...!