ராஜாவின் ராஜாங்கம்!

/idhalgal/cinikkuttu/kings-kingship

"மதுரை முத்து மூவிஸ்' மற்றும் "கனவு தொழிற்சாலை' இணைந்து தயாரித்துவரும் படம் "அக்கா குருவி'. சாமி டைரக்ட் செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீ-ரெகார்டிங் வேல

"மதுரை முத்து மூவிஸ்' மற்றும் "கனவு தொழிற்சாலை' இணைந்து தயாரித்துவரும் படம் "அக்கா குருவி'. சாமி டைரக்ட் செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீ-ரெகார்டிங் வேலை கள் நடைபெற்றுவருகின்றன. உலகத் தரவரிசையில் இப்படத்துக்கு ரீ-ரெகார்டிங் செய்துவருகிறார் இளையராஜா.

raja

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். உலகப் புகழ்பெற்ற திரைப்படமான "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தின் மறுபதிப்பான "அக்கா குருவி'-யை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கி யுள்ளார் சாமி. படத்தைப் பார்த்த பின்தான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இளையராஜா.

இரண்டு குழந்தைகள், அப்பா- அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும். இந்த காட்சிகளுக்குப் பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் 11 பழைய பாடல்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

மே மாதம் இப் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.

cini170320
இதையும் படியுங்கள்
Subscribe