Advertisment

கிம்பல் டெக்னிக்!

/idhalgal/cinikkuttu/kimble-technique

யக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரான "பரியேறும் பெருமாள்.' செப்டம்பர் 28 அன்று வெளியாகியுள்ளது.

Advertisment

tech

பட அனுபவம் குறித்து ஒளிப் பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், "பரியேறும் பெருமாள்' என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் "மாலை

யக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரான "பரியேறும் பெருமாள்.' செப்டம்பர் 28 அன்று வெளியாகியுள்ளது.

Advertisment

tech

பட அனுபவம் குறித்து ஒளிப் பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், "பரியேறும் பெருமாள்' என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் "மாலை நேரத்து மயக்கம்.' நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான். எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் என்னை புதிதாக இயங்கச் சொல்கிறது. என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குநர் மாரி செல்வராஜ் "பரியேறும் பெருமாள்' கதையைக் கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பகுதிகள். அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள், தெருக்கள், வெயில் மனிதர்கள், விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும், கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிற ஆசை. கதைக்களம், அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க "கிம்பல்' எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.

40 கிலோ எடைகொண்ட "கிம்பல்' கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும் படம் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது'' என்றார் உற்சாகமாக.

cine091018
இதையும் படியுங்கள்
Subscribe