Advertisment

கேடுகெட்ட நாய்களை சுட்டுக் கொல்லணும்

/idhalgal/cinikkuttu/kill-dogs-and-kill-them

திமிர் பிடித்த பணக்கார வெறி நாய்களால், பொள்ளாச்சியில் வேட்டையாடப்பட்ட அப்பாவி இளம்பெண்களின் கதறல், மனித மனம் கொண்டோர் அனைவரையும் குலைநடுங்கச் செய்கிறது. இந்தியாவில் அத்தனை மீடியாக்களும் இந்தக் கொடூரத்தை கண்டு கொள்ளாத நிலை யில் நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால் அவர்கள், கடந்த 12-ஆம் தேதி யூ டியூப்பில் 26 நிமிடம் பேசிய பேச்சு, இதயம் உள்ள அனைவரை யும் உலுக்கி எடுத்து விட்டது. அதன் பின்தான் ந

திமிர் பிடித்த பணக்கார வெறி நாய்களால், பொள்ளாச்சியில் வேட்டையாடப்பட்ட அப்பாவி இளம்பெண்களின் கதறல், மனித மனம் கொண்டோர் அனைவரையும் குலைநடுங்கச் செய்கிறது. இந்தியாவில் அத்தனை மீடியாக்களும் இந்தக் கொடூரத்தை கண்டு கொள்ளாத நிலை யில் நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால் அவர்கள், கடந்த 12-ஆம் தேதி யூ டியூப்பில் 26 நிமிடம் பேசிய பேச்சு, இதயம் உள்ள அனைவரை யும் உலுக்கி எடுத்து விட்டது. அதன் பின்தான் நாடே கொந்தளித்தது.

Advertisment

சினிமா பிரபலங் களும் தங்களின் கோபக் கொந்தளிப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

Advertisment

varalakshmi

அவர்களில் சிலரது ஆவேசமும் அடங்கா கோபமும்தான் இங்கே.

varalakshmiகமல்: பொம்பளப் புள்ளைகளைப் பெத்த எல்லாரையும் பதற வச்சுருச்சே. பெண்ணின் பெயரால் ஆட்சி நடத்துபவர்கள் என்ன செய்யப்போகிறார் களோ...?

சத்யராஜ்: இந்த மனித மிருகங்களுக்கு உடனடியாக உச்ச பட்ச தண்டனை வழங்கவேண்டும்.

டைரக்டர் சேரன்: அரபு நாடுகளில் பயன்படுத்தப்படும் சட்டத்தைப் பயன் படுத்தினாலும் தப்பே இல்லை.

நடிகை விஜயலட்சுமி: இந்த கேடு கெட்ட நாய்களை யெல்லாம் நடுத்தெருவில் நிற்கவைத்து சுட்டுக் கொல்லவேண்டும்.

ரா.பார்த்திபன்: இந்தமாதிரி வன்முறைகள், நீதிமன்றத்தின் கடுமையான தண்டனைகளால் மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: இனியும் நாம் மௌனம் காக்கத்தான் வேண்டுமா?

சசிகுமார்: நினைச் சாலே குலைநடுங்குது.

அந்தக் கயவர்களை சும்மா விடக்கூடாது.

வரலட்சுமி: பொள்ளாச்சி படுபாவி களை தோலுரித்துக் கொல்ல வேண்டும்.

அதுல்யா ரவி: படுபயங்கரமான தண்டனை கொடுத்தால் தான், இனிமேல் இது போன்ற படுபாவிகள் உருவாகமாட்டார்கள்.

ராஷி கண்ணா:

அந்தக் கொடியவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்களின் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும்.

ஷில்பா மஞ்சுநாத்: (விஜய் ஆன்டனியின் "காளி', இப்போது ரிலீசாகியிருக் கும் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களின் ஹீரோயின்) நட்பான குடும்பம் அமையா ததே, பல பெண்கள் வெளியில் அன்பைத் தேடக் காரணம். வீட்டில் மனம்விட்டுப் பேச ஆட்கள் இருந்தால் எந்தப் பெண்ணிற் கும் வெளியில் அன்பைத் தேடும் தேவை இருக்காது. பொள்ளாச்சி விஷயத்தைப் பொருத்தவரை கயவர்கள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

ஜி.வி. பிரகாஷ்: இந்த மிருகங்களை பொதுவெளியில் நடமாடவிடுவது மனித சமூகத்திற்கு பேராபத்து.

-ஈ.பா. பரமேஷ்வரன்

cine260319
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe