Advertisment

கேணி -விமர்சனம்

/idhalgal/cinikkuttu/kayni-review

kayni

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ள இந்த நேரத்தில் ரீலீசாகியிருக்கிறது "கேணி.' ஃப்ராக் கிரண்ட நேச்சர் ஃபிலிலிம் கிரியேஷன்ஸ் பேனரில் சஜீவ் பி.கே., ஆன் சஜீவ் தயாரிப்பில் எம்.ஏ. நிஷாத் டைரக்ஷனில் பார்த்திபன், ஜெயப்ரதா, ரேவதி, நாசர், அனுஹாசன், ரேகா, "தலைவாசல்' விஜய், எம்.எ

kayni

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ள இந்த நேரத்தில் ரீலீசாகியிருக்கிறது "கேணி.' ஃப்ராக் கிரண்ட நேச்சர் ஃபிலிலிம் கிரியேஷன்ஸ் பேனரில் சஜீவ் பி.கே., ஆன் சஜீவ் தயாரிப்பில் எம்.ஏ. நிஷாத் டைரக்ஷனில் பார்த்திபன், ஜெயப்ரதா, ரேவதி, நாசர், அனுஹாசன், ரேகா, "தலைவாசல்' விஜய், எம்.எஸ். பாஸ்கர், பிளாக் பாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த இந்திரா (ஜெயப்ரதா) அங்கே ஜியாலஜிஸ்டாக வேலை பார்க்கும் ஹரிஹரனை காதலிலித்து கல்யாணம் செய்துகொள்கிறார். கேரள அமைச்சரின் சூழ்ச்சியால், மாவோயிஸ்ட் முத்திரை குத்தப் பட்டு, ஜெயிலுக்குப் போகும் ஹரிஹரன், மாரடைப்பால் இறந்துவிடுகிறார். கணவரின் மறைவுக்குப் பிறகு, அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், தென்காசி தாலுகாவிலுள்ள புளியன்விளைக்கு குடிபெயர்கிறார் இந்திரா.

Advertisment

kaynireview

கணவரின் பூர்வீக வீட்டின் முன்பாக இருக்கும் ஒரு "கேணி', இரு மாநிலங் களுக்கிடையிலான மறுசர்வேயில், கேரள எல்லைக்குள் போய்விடுகிறது. வறட்சியால் தவிக்கும் புளியன்விளை கிராமத்து மக்களுக்கு தனக்குச் சொந்தமான கேணியிலிலிருந்து தண்ணீர் கொடுக்க சட்டப்பூர்வாக போராடுகிறார் இந்திரா. இவரின் போராட்டத்திற்கு வக்கீல் நாசரும், ஊர்த்தலைவர் பார்த்திபனும் மக்களும் துணை நிற்கிறார்கள்.

தமிழகத்திற்கும் கேரளாவுக்கு மிடையே நீருபூத்த நெருப்பாக இருக்கும் முல்லைப் பெரியார் பிரச்சினையை முள் கம்பிமீது நடந்து மிகக் கவனமாக கையாண்டு கேணி மூலம் தீர்வு சொல்லிலியிருக்கிறார் டைரக்டர் எம்.ஏ. நிஷாத்.

இடைவேளைக்குப் பின்பு காட்சிகள் நகரும் விதத்தில் சற்றே அயற்சி ஏற்பட்டாலும், டைரக்டரின் நல்ல முயற்சியைப் பாராட் டியே ஆகவேண்டும்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe