/idhalgal/cinikkuttu/kavaiyan

"காவியன்' என்ற தலைப்போடு ஒரு கனமான கதையோடு களம் இறங்கத் தயாராக இருக்கிறது படக் குழு. உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத்தான்.

kk

அந்த அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியாவது இந்தியர்கள்தான்.

"காவியன்' என்ற தலைப்போடு ஒரு கனமான கதையோடு களம் இறங்கத் தயாராக இருக்கிறது படக் குழு. உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத்தான்.

kk

அந்த அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியாவது இந்தியர்கள்தான். இப்படி ஒரு அதிர்ச்சிகலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் "காவியன்' படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை 2எம் சினிமாஸ்க்காக கே.வி. சபரிஷ் தயாரித்திருக்கிறார்.

kkk

ஹாலிவுட் தரத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் கதை யின் நாயகனாக ஷாம் நடிக்கிறார். "மனம் கொத்திப் பறவை' படத்தில் அறிமுகமான ஆத்மியா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவிகுமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய நடிகர்களும் படத்தில் பங்கேற்கிறார்கள்.

இயக்கி இருப்பவர் சாரதி.

ஒளிப்பதிவு என்.எஸ். ராஜேஷ் குமார். இசை ஸ்யாம் மோகன் எடிட்டராக அருண்தாமஸ் பணியாற்றியுள்ளார். ஆர்ட் டைரக்டராக டி.என். கபிலனும், சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சிவாவும் கவனித் துள்ளனர். மோகன்ராஜ் பாடல்களை எழுதி இருக்கி றார். சவுண்ட் டிசைனராக எம்.ஜே. ராஜு, மேக்கப்: பி.எஸ். குப்புசாமி, காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி.

இந்தியத் தொழிநுட்பக் கலைஞர்களோடு ஹாலிவுட் கலைஞர்களும் பங்கெடுத் துள்ள இப்படம் இம்மாதம் 18-ஆம் தேதி வெளியாகி உள்ளது.

cini291019
இதையும் படியுங்கள்
Subscribe