Advertisment

கார்த்தியின் அர்ப்பணிப்பு -ஜீத்து ஜோசப் பெருமிதம்!

/idhalgal/cinikkuttu/karthis-dedication-jeet-joseph-proud

ருகிற 20-ஆம் தேதி ரிலீசாகவுள்ள "தம்பி' படத்தைப் பற்றி நம்மிடம் பேசினார் டைரக்டர் ஜீத்து ஜோசப். ""இப்படம் இரண்டு குடும்பத்தின் கதை. இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்கிடையே நடக் கும் ஒரு கதை. அடிப்படையில் குடும்பக் கதையாக இருந்தா லும் இதில், குடும்ப உணர்வு கள், நகைச்சுவை தருணங்கள் மற்றும் திகைப்பூட்டும் காட்சிகள் நிறைந்தி ருக்கும்.

Advertisment

"தம்பி' படத்தைப் பார்க்கவருபவர்கள் படத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொள் வார்கள். எதிர்பாராது நடக்கும் காட்சி களை ரசிப

ருகிற 20-ஆம் தேதி ரிலீசாகவுள்ள "தம்பி' படத்தைப் பற்றி நம்மிடம் பேசினார் டைரக்டர் ஜீத்து ஜோசப். ""இப்படம் இரண்டு குடும்பத்தின் கதை. இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்கிடையே நடக் கும் ஒரு கதை. அடிப்படையில் குடும்பக் கதையாக இருந்தா லும் இதில், குடும்ப உணர்வு கள், நகைச்சுவை தருணங்கள் மற்றும் திகைப்பூட்டும் காட்சிகள் நிறைந்தி ருக்கும்.

Advertisment

"தம்பி' படத்தைப் பார்க்கவருபவர்கள் படத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொள் வார்கள். எதிர்பாராது நடக்கும் காட்சி களை ரசிப்பார்கள். படம் முழுவதும் ஆர்வத் துடன் பார்க்கவேண்டும் என்பதால் கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறேன்.

Advertisment

இப்படத்திற்கு திரைக்கதை ரின்சில் டிசில்வா எழுதியிருந்தாலும், என்னுடைய உள்ளீடும் இருக்கிறது. நான் கேரளாவைச் சேர்ந்தவன். ரின்சில் டிசில்வா மும்பையிலிருந்து வந்தவர்.

ஆனால், கதையோ தமிழ்க் கலாசாரத்தைச் சரியாகக் கொண்டுசேர்க்கவேண்டும். ஆகையால், மணிகண்டனை ("விக்ரம் வேதா' படத்திற்காக வசனம் எழுதியவர்) ஈடுபடுத்தியிருக்கிறோம். அவருடைய யோசனைகளையும் சேர்த்திருக்கி றோம். நான்குபேருடைய மூளையையும் பயன்படுத்தி திரைக்கதை அமைந்திருக்கிறது. இதுதான் இப்படம் நன்றாக வருவதற்கு காரணமாக இருக்கிறது.

அம்மா, அப்பா என்று பல உறவுகள் இப்படத்தில் இருந்தாலும், அக்கா, தம்பி உறவை மையப்படுத்தி இக்கதை அமைந்திருப்பதால் கார்த்திக் கும், ஜோதிகாவிற்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும்.

jeet

கார்த்தி திறமையான நடிகர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்பதைப் புரிந்துகொண்டு நேர்மை யாகவும், கடின முயற்சியும் எடுத்து நடிக் கக்கூடிய மனிதர். சண்டை காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் என எல்லாவற் றையும் திறமையாகச் செய்யக்கூடியவர் கார்த்தி.

ஜோதிகா திறமையான, அனுபவ மிக்க நடிகை என்பதை ஏற்கெனவே நிரூபித்துவிட்டார்.

கார்த்தியின் ஜோடியான நிகிலா விமலுக்கு சிறுசிறு கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு நடிகரிடமும் உங்களுடைய பாத்திரம் இதுதான் என்று முன்பே கூறி தான் நடிக்க வைத்திருக்கிறோம். ஒரு சிறிய கதாபாத்திரத்தைக்கூட நீக்கிவிட்டு இப்படத்தை எடுக்கமுடியாது.

நான் பரிபூரணமாக இப்படத்தை இயக்கி இருக்கிறேனா என்பது தெரியாது. ஆனால், திரில்லர் கதை என்பதால், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளி வாக எழுதி, நன்றாகப் படித்துவிட்டுதான் இயக்கியிருக்கிறேன்.

சினிமாவிற்கு மொழி என்றுமே தடை யாக இருந்ததில்லை. கார்த்தி அவருடைய வசனங்களை "மலையாளத்திலேயே எழுதிக்கொடுங்கள், என்னுடைய உதவி யாளரை வைத்து நான் மொழிமாற்றம் செய்து கொள்கிறேன்' என்றார்.

நான் பார்த்தவரையில் மோகன்லால் மாதிரி கார்த்தியும், ஜோதிகாவும் அர்ப்பணிப்போடு நடிக்கக்கூடிய வர்கள்'' என்றார் பெருமிதத்துடன்.

cini241219
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe