Advertisment

கார்த்தி இல்லேன்னா கைதி இல்லை -டைரக்டர் பெருமிதம்!

/idhalgal/cinikkuttu/karthi-illanna-not-prisoner-director-boast

""மாநகரம்' என்கிற ஒரே படம் மூலம் தமிழ் சினிமா உலகை திரும்பிப் பார்க்கவைத்த இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய "கைதி' தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ளது.

Advertisment

தற்போது "விஜய் 64' படத்தை இயக்கிவருகிறார்.

"கைதி' படவெளியீட்டை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ்.

Advertisment

"""மாநகரம்' படத்தை மக்களிடம் கொண்டுசேர்த்தது நீங்கள்த

""மாநகரம்' என்கிற ஒரே படம் மூலம் தமிழ் சினிமா உலகை திரும்பிப் பார்க்கவைத்த இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய "கைதி' தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ளது.

Advertisment

தற்போது "விஜய் 64' படத்தை இயக்கிவருகிறார்.

"கைதி' படவெளியீட்டை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ்.

Advertisment

"""மாநகரம்' படத்தை மக்களிடம் கொண்டுசேர்த்தது நீங்கள்தான். "கைதி' முடியும்போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்துவிட்டன. அதனால் உங்களை சந்திக்க முடிய வில்லை. இந்த தீபாவளி தின வாழ்த்து களோடு உங்களை சந்திக்கிறேன்.

kk

"கைதி' படம் ஆரம்பிக்கும்போதே ஹிரோயின் தேவைப்படவில்லை. அதற் கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.''

உங்களின் இரு படங்களும் இரவில் நடக்கிறதே.. இரவின்மீது அப்படி என்ன காதல்?

திட்டமிட்டெல்லாம் அப்படிச் செய்யவில்லை. "மாநகரம்' எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந் தேன். அதைச் செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக் கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

"கைதி' படத்தில் கார்த்தியை மையப்படுத்திதான் கதை. ஹிரோ யின் இல்லை எனும்போது, அவரைச் சுற்றிதான் எல்லாமும் நடக்கும். இந்தப் படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் "பருத்தி வீரன்'போல இருப்ப தாகச் சொன்னார்கள். ஆனால், அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். கார்த்தி ஒப்புக்கொண்டதால்தான் இந்தப்படமே உருவானது. அவர் ஒத்துழைப்பு அபார மானது!

இந்தப்படம் ஹாலிவுட்டில் வந்த "டை ஹார்ட்' படத்தின் இன்ஸ் பிரேஷன் எனச் சொல்லலாம்.

படத்தில் பெண் கதாபாத்திரங்களே இல்லை என்பது நிஜம் அல்ல. இதில் மூன்று முக்கியமான பெண் பாத்திரங் கள் இருக்கின்றன. கதாநாயகிக்கான தேவையில்லை. அதனால் இதில் வைக்கவில்லை. மொத்தப்படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் அதற்கான இடம் படத்தில் இல்லை. அவ்வளவுதான்.

இரவில் எடுப்பது சவாலாகத்தான் இருந்தது. இரவு எட்டு மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம். இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம் தான். நல்ல டீம் அமைந்தது.

"விஜய் 64' என்ன மாதிரி படம் ?

அது இப்போதுதான் ஆரம்ப கட்டப் பணிகளில் இருக்கிறது. அதைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

cini051119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe