Advertisment

கார்த்தி படம்! கதை வில்லங்கம்!

/idhalgal/cinikkuttu/karthi-flim-story-villagam

ஜினியின் "லிங்கா', விஜய்யின் "கத்தி', "சர்கார்' படங்களின் கதைத் திருட்டு வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது கார்த்தியின் "சுல்தான்' படம். கார்த்தி- ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் என மெகா கூட்டணியை வைத்து "சுல்தான்' படத்தைத் தயாரிக்கிறார்கள் ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு. சிவகார்த்திகேயனை வைத்து "ரெமோ' படத்தை டைரக்ட் பண்ணிய பாக்யராஜ் கண்ணன்தான், கார்த்தியின் "சுல்தான்' டை

ஜினியின் "லிங்கா', விஜய்யின் "கத்தி', "சர்கார்' படங்களின் கதைத் திருட்டு வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது கார்த்தியின் "சுல்தான்' படம். கார்த்தி- ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் என மெகா கூட்டணியை வைத்து "சுல்தான்' படத்தைத் தயாரிக்கிறார்கள் ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு. சிவகார்த்திகேயனை வைத்து "ரெமோ' படத்தை டைரக்ட் பண்ணிய பாக்யராஜ் கண்ணன்தான், கார்த்தியின் "சுல்தான்' டைரக்டர்.

Advertisment

ddd

இப்ப கதை திருட்டு மேட்டருக்கு வருவோம். முன்னணி டைரக்டர்கள் சிலரிடம் இணை இயக்குநராக இருந்த கணேச மூர்த்தி "ரெமோ' ரிலீசுக்கு முன்பே "சுல்தான்' கதையை எழுதியுள்ளார். (கணேசமூர்த்தியின் கதைக்கு டைட்டில் மட்டும்தான் வேறு). தான் எழுதிய கதையை பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவரிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருக்கும் தனது நண்பரிடமும் பகிர்ந்துள்ளார்.

Advertisment

dd

அதன்பின் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் பதிவு பண்ணிவிட்டு, டைரக்ஷன் சான்ஸுக்காக பல சினிமாக் கம்பெனிகளுக்கும் ஏறி இறங்கியுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பாக பாக்யராஜ் கண்ணன் டைரக்ஷனில் கார்த்தி நடிப்பதாக தகவல் வெளியானது. அப்போதுகூட தனது கதையாகத்தான் இருக்கும் என கணேசமூர்த்தி யோசிக்கவில்லை. உதவி இயக்குநர் ஒருவர் எதேச்சையாக கணேசமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது... கார்த்தி படக் கதையைப் பற்றி சொல்லியதும் அதிர்ந்துவிட்டார் கணேசமூர்த்தி!

dd

கணேசமூர்த்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கு வதற்குள், பெயர் வைக்காமலேயே கார்த்தி படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் சென்னையில் ஆரம்பமாகி விட்டது. டி.ஆர். கார்டனில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, கணேசமூர்த்தி அங்கு சென்றுள்ளார். இவரின் கதையில் இருந்த செட்டப்பு கள் அத்தனையும் அங்கே இருந்துள்ளன.

அதன்பின் தெ.தி.எ. சங்கத்தின் தலைவர் கே. பாக்யராஜிடம் நீதிகேட்டு புகார் மனு கொடுத்திருக்கிறார்.

கே. பாக்யராஜும் பாக்யராஜ் கண்ணனை சங்கத்திற்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தும் வராமல் டிமிக்கி கொடுத்து விட்டார். கடந்த ஜூலை 9-ஆம் தேதி சங்கத்திற்கு வருவதாகச் சொல்லி அப்போதும் வர வில்லையாம் பாக்யராஜ் கண்ணன்.

பாக்யராஜ் கண்ணன் கதை திருடிய விவகாரம் ஹீரோ கார்த்திக்கு தெரியுமோ- தெரியாதோ.

ஆனாலும் கண்டிப்பாக தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கணேசமூர்த்தி.

cine060819
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe