dineshனசுக்குப் பிடிச்ச வேலைக்குப் போகணும், கைநிறைய சம்பாதிக்கணும், மனம் நிறைவா வாழணும்- இதுதான் நண்பர்கள் இருவரின் லட்சியம். அவர்கள் நினைத்தபடியே வேலை கிடைக்கிறது, வேலை தேடலுக்கிடையே காதல் வருகிறது. ஒரு நண்பனின் காதலில் பிரச்சினையாகி, கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட, நண்பனின் இந்த நிலைக்கு காரணமானவரைக் கொலை செய்கிறான் இன்னொரு நண்பன். இவர்கள் ஆசைப்பட்டது மாதிரியெல்லாம் வாழ்க்கையில் நடந்ததா என்பதை தனது திரைக்கதை- வசனம்மூலம் "பிரம்மபுத்ரா'-வில் சொல்லியிருக்கிறார் டைரக்டர் தாமஸ். இதில் நண்பர்களாக டாக்டர் தினேஷ் (எம்.பி.பி.எஸ்.முடிச்ச ஒரிஜினல் டாக்டர் தாங்க), முரளி ஆகியோரும் அவர்களுக்கு ஜோடியாக உதயதாராவும் அக்ஷதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் டெல்லி கணேஷ், வையாபுரி, பாண்டு ஆகியோரும் உள்ளனர்.

Advertisment

raghulpreetsingh

கேரளாவைச் சேர்ந்த ஹீரோயின் உதயதாரா சில ஆண்டுகளுக்கு முன் ஜி. மாரிமுத்து டைரக்ஷனில் வெளியான "கண்ணும் கண்ணும்' படத்தில் பிரசன்னாவைக் காதலித்து ஏமாற்றம் அடைபவராக நடித்தவர். படத்தின் உருக்கமான காட்சிகளைப் பார்த்து கண் கலங்கிய சென்சார் அதிகாரிகள் "யு' சர்டிபிகேட் கொடுத்து தயாரிப்பாளரும் ஹீரோவுமான டாக்டர். தினேஷை ரொம்பவே பாராட்டினார்களாம். இந்த மாதக் கடைசியில் ரிலீசாகிறது "பிரம்ம புத்ரா.'