Advertisment

கூட இருந்து குழி பறித்த படுபாவி -குமுறும் கஞ்சா கருப்பு!

/idhalgal/cinikkuttu/kancha-karuppu

சென்ற இதழ் தொடர்ச்சி...

kanchakaruppu

டன் எகிறியதால் இந்த வீடும் ஏலம்போகும் நிலைக்கு வந்ததாமே- உண்மையா?

சிறுகசிறுகச் சேர்த்துவச்ச பணம், பேங்ல லோன் வாங்கி இந்த வீட்டைக் கட்டி முடிச்சேன். அப்ப கையில வரிசையா படங்கள் இருந்ததால் பிஸியா இருந்தேன். அதனால மொத்தமா செக்குகள்ல கையெழுத்துப் போட்டு, எனக்கு அப்ப மேனேஜரா இருந்தவன்,

சென்ற இதழ் தொடர்ச்சி...

kanchakaruppu

டன் எகிறியதால் இந்த வீடும் ஏலம்போகும் நிலைக்கு வந்ததாமே- உண்மையா?

சிறுகசிறுகச் சேர்த்துவச்ச பணம், பேங்ல லோன் வாங்கி இந்த வீட்டைக் கட்டி முடிச்சேன். அப்ப கையில வரிசையா படங்கள் இருந்ததால் பிஸியா இருந்தேன். அதனால மொத்தமா செக்குகள்ல கையெழுத்துப் போட்டு, எனக்கு அப்ப மேனேஜரா இருந்தவன், பேரைச் சொல்லவே கேவலமா இருக்குண்ணே.

Advertisment

அவன்ட்ட கொடுத்துருவேன். நம்பிக்கொடுத்த என்னோட கழுத்த அறுத்துட்டான் அந்த படுபாவி. அஞ்சு வருஷமா வீட்டு லோன் கட்டாம இருந்த விஷயம் எனக்கு லேட்டாத்தான் தெரிஞ்சுச்சு. அதுக்குள்ள நிலைமை முத்திப்போச்சு, ஒண்ணரைக் கோடி கடனா கிப் போச்சு.

Advertisment

அப்புறம் பேங்க் ஆபீசருக கால்ல கைல விழுந்து வட்டியக் கொஞ்சம் கொறச்சு, இப்ப கட்டிக்கிட்டு வர்றேன். நான் கடனாளி ஆனது தெரிஞ்சதும் என்னோட மாமனார் சதாசிவம் மாரடைப்பால செத்தாரு. சிவகங்கை தேவஸ்தானத்துல வேலை பார்த்த என்னோட தாத்தா (அம்மாவின் அப்பா) செத்தாரு. எங்க அக்கா மகன் ராஜா குடிச்சுக் குடிச்சு மஞ்சள் காமாலை வந்து செத்துப்போனான். அஞ்சு லட்சம் செலவு செஞ்சும் காப்பாத்த முடியல. சிலபேரு எனக்கு கத்துக் கொடுத்த பாடத்தால, இப்பல்லாம் பல்லு வௌக்க பத்து ரூபா பேஸ்ட் வேணும்னாலும் நானேதான் கடைக்குப் போய் வாங்குறேன்.

என்னோட மனசுல இருக்குறத ஒங்ககிட்ட இறக்கி வச்சுட்டேன். ஒங்கபேரும் பரமேஸ்வரன்னு சொன்னீங்க. அந்த பகவான் ஈஸ்வரன்கிட்டேயே சொன்னமாதிரி இருக்கு. நன்றி. வணக்கம்ணே. நீங்க டீ குடிச்சிக் கிட்டிருங்க, இந்தா வந்துர்றேன் எனச் சொல்லிவிட்டு வெளியே போனார் கஞ்சா கருப்பு.

டீ குடித்து முடித்துவிட்டு நாம் வெளியே வந்தபோது, எதிரில் இருந்த மளிகைக்கடையில் பத்து ரூபாய் டூத் பிரஷ்ஷும் பேஸ்டும் வாங்கிக் கொண்டு வந்தார் கஞ்சா கருப்பு.

-சந்திப்பு: ஈ.பா.பரமேஷ்வரன்

cine161018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe