Advertisment
/idhalgal/cinikkuttu/kana-review

மிழ் சினிமாவில் உணர்வை உசுப்பும், மனசை உலுக்கும் படங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இப்போது வந்திருக்கும் "கனா' வேற லெவல். ஏறத்தாழ அழியும் நிலைக்கு வந்துவிட்ட விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் காட்சிப்படுத்த நினைத்த டைரக்டர் அருண்ராஜா காமராஜ், அதை கிரிக்கெட்டுடன் தொடர்புப்படுத்தி உலக லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார்.

Advertisment

ashwariya

திருச்சி மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த விவசாயி முருகேசன் (சத்யராஜ்) மனைவி ரமா, மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் என அளவான குடும்பம். ஒண்டே மேட்சில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்காக அழுகிறார் முருகேசன். இதைப் பார்க்கும் மகள் கௌசல்யா, இனிமேல் அப்பா அழக்கூடாது,

மிழ் சினிமாவில் உணர்வை உசுப்பும், மனசை உலுக்கும் படங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இப்போது வந்திருக்கும் "கனா' வேற லெவல். ஏறத்தாழ அழியும் நிலைக்கு வந்துவிட்ட விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் காட்சிப்படுத்த நினைத்த டைரக்டர் அருண்ராஜா காமராஜ், அதை கிரிக்கெட்டுடன் தொடர்புப்படுத்தி உலக லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார்.

Advertisment

ashwariya

திருச்சி மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த விவசாயி முருகேசன் (சத்யராஜ்) மனைவி ரமா, மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் என அளவான குடும்பம். ஒண்டே மேட்சில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்காக அழுகிறார் முருகேசன். இதைப் பார்க்கும் மகள் கௌசல்யா, இனிமேல் அப்பா அழக்கூடாது, அதற்காக இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து உலகக் கோப்பையை ஜெயித்துக் காட்ட வேண்டுமென்ற லட்சித்துடன், சிறுமியாக இருக்கும்போதே முடிவு செய்கிறார்.

Advertisment

இதற்காக உள்ளூரில் கிரிக்கெட் விளையாடும் மாணவர்களுடன் தானும் விளையாட ஆரம்பிக்கிறார்.

படிப்படியாக வளர்ந்து ஆளாகி, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து உலகக் கோப்பையை வென்று, தந்தையை மகிழ்விக்கிறார்.

kanna

சத்யராஜின் சினிமா வாழ்க்கை யில் இந்த "கனா' முக்கியமான படம். மனைவியின் கட்டுப்பாட்டையும் மீறி, மகளின் கிரிக்கெட் ஆசைக்கு உரமாகவும், கருகும் பயிர்களைப் பார்த்து கதறும் விவசாயியாகவும் வாழ்ந்திருக்கார் மனுஷன். இவருக்கு அடுத்து நடிப்பில் டபுள் செஞ்சுரி அடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நிஜமான கிரிக்கெட் வீராங்கனைகளின் உடல்மொழியையும் உத்வேகத்தையும் 100% பிரதிபலித்திருக்கிறார்.

இடைவேளைக்குப்பின் வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன். இவரின் வருகைக்குப்பின் படத்தின் ஸ்பீடும் டி-20 மேட்ச் மாதிரி செம ஸ்பீடாகிறது. இந்திய அணியின் முன்னணி வீரராக, விக்கெட் கீப்பராக இருக்கும் சிவாவுக்கு, ஒரு மேட்சில் கண்ணில் அடிபட்டதால், டீமிலிருந்து விலகும் நிலை. சிறிதுகால இடைவெளிக்குப் பிறகு, பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வருகிறார். செலக்ஷன் கமிட்டியுடன் சண்டை போட்டு, உலகக் கோப்பைக்கான சிறந்த டீமை ஃபார்ம் பண்ணுகிறார்.

""நீ தமிழ்நாட்டுப் பொண்ணு.

அந்த மண்ணுக்கே உண்டான குணாதிசயம் இருக்கணும்'' என ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உற்சாக மூட்டுகிறார்.sivakarthikeyan

தமிழ்நாடு டீமில் செலக்ஷன் ஆகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இங்கே குளித்தலையில் பயிர் கருகுகிறது. இந்திய டீமில் செலக் ஷன் ஆகும், வங்கி யில் வாங்கிய கடனுக் காக குளித்தலை வீடு ஜப்தியாகிறது செம மேட்சிங் சீன்.

உலகக் கோப்பை செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியதும் "உமன் ஆஃப் தி மேட்'சான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வழங்குகிறார்கள். அப்போது, ""டெண்டுல்கர் போனா கிரிக்கெட்டைக் காப்பாத்த கங்குலி வர்றார். கங்குலி போனா, டோனி வர்றார்.

இப்போது ஹோலி வந்திருக்கார். ஆனா விவசாயி முருகேசன் போனா இன்னொரு விவசாயி வரமுடியல. இப்ப இந்த அஞ்சு லட்சம் கொடுத்த பேங்குல தான் எங்க அப்பா கடன் வாங்கி, கட்ட முடியாம எங்க வீடு ஜப்தி ஆச்சு. இந்தப் பணத்துல நீங்களே வச்சுக்கங்க'' என க்ளைமாக்ஸில் ஐஸ்வர்யா பேசும் டயலாக், செம சாட்டையடி.

சத்யராஜின் நண்பனாக வரும் இளவரசு, ஐஸ்வர்யாவை ஒருதலையாகக் காதலிக் கும் தர்ஷன் ஆகியோரும் தங்களது பங்களிப்பைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் கள். டைரக்டர் அருண்ராஜா காமராஜுக்கு கேமராமேன் தினேஷ் கிருஷ்ணன், மியூசிக் டைரக்டர் தபு நைனன் தாமஸ், எடிட்டர் ரூபன் ஆகியோர் ரொம் பவே பக்கபலமாக இருக்கிறார்கள்.

"கனா' பெண்களுக்கு தன்னம் பிக்கையையும், விவசாயத்தின்மீது நம்பிக்கையையும் விதைக்கிறது. "கனா' கண்டிப்பாக எல்லாரும் பார்க்க வேண்டிய நிஜம்.

cine010119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe