Advertisment

கமலின் "பிக்பாஸ்' பயங்கரம்! அமீர் ஆவேசம்

/idhalgal/cinikkuttu/kamals-biggboas-payangaram-amirs-rage

"என்னடா பொழுது விடிஞ்சுருச்சே...! இன்னும் ஒண்ணும் நடக்கலையேன்னு பார்த்தேன்.

Advertisment

நடந்துருச்சு! நடத்திட்டாய்ங்க'' இது "தலைநகரம்' படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி டயலாக்.

அதேமாதிரிதான், என்னடா "பிக்பாஸ்' ஆரம்பிச்சு அம்பது நாளைக்கு மேலாச்சு, ஒண்ணும் நடக்கலையேன்னு பார்த்தோம். நடந்துருச்சு! மதுமிதாவை வச்சு நடத்திட்டாய்ங்க!

d

Advertisment

விஜயகுமாரின் மகளான நடிகை வனிதாவை விசாரிப்பதற்காக "பிக்பாஸ்' வீட்டுக்குள் போலீஸ் போனதுமே நிகழ்ச்சிக்கு பரபரப்பு கூடுச்சு. அதுக்கடுத்து பண சீட்டிங் சம்பந்தமாக, மாடலிங்கும் சினிமா நடிகையுமான மீரா மிதுனை, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி, "பிக்பாஸ்' வீட்டிற் கு

"என்னடா பொழுது விடிஞ்சுருச்சே...! இன்னும் ஒண்ணும் நடக்கலையேன்னு பார்த்தேன்.

Advertisment

நடந்துருச்சு! நடத்திட்டாய்ங்க'' இது "தலைநகரம்' படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி டயலாக்.

அதேமாதிரிதான், என்னடா "பிக்பாஸ்' ஆரம்பிச்சு அம்பது நாளைக்கு மேலாச்சு, ஒண்ணும் நடக்கலையேன்னு பார்த்தோம். நடந்துருச்சு! மதுமிதாவை வச்சு நடத்திட்டாய்ங்க!

d

Advertisment

விஜயகுமாரின் மகளான நடிகை வனிதாவை விசாரிப்பதற்காக "பிக்பாஸ்' வீட்டுக்குள் போலீஸ் போனதுமே நிகழ்ச்சிக்கு பரபரப்பு கூடுச்சு. அதுக்கடுத்து பண சீட்டிங் சம்பந்தமாக, மாடலிங்கும் சினிமா நடிகையுமான மீரா மிதுனை, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி, "பிக்பாஸ்' வீட்டிற் குள் சென்று நோட்டீஸ் கொடுத்துவிட்டு, சென்னை மாநகர போலீஸ் திரும்பிய தும் நிகழ்ச்சிக்கு மேலும் எதிர்பார்ப்பு எகிறியது.

அதுக்கடுத்து "பருத்தி வீரன்' சரவணன், "பிக்பாஸி'-ன் சக போட்டி யாளரான டைரக்டர் சேரனை ஒருமையில் திட்டியதும், வெளியில் இருக் கும் முன்னணி டைரக்டர்கள் கடுப்பானார்கள். இதனால் இன்னும் கூடுதலாக திகுதிகு வென பற்றியது "பிக்பாஸ்' புரோக்ராம்.

ஆனால், இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்விதமாக கடந்த வாரம், காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா, தனது இடது கையை கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதும் பரபரப்புத் தீ மேலும் பரவி, பார்வை யாளர்களைப் பதறவைத்தது. மதுமிதா வும் "பிக்பாஸ்' வீட்டைவிட்டு வெளியேற் றப்பட்டார்.

bb

இந்த பரபரப்புத் தீ அடங்கு வதற்குள் அடுத்த தீயைப் பற்ற வைத்தார் "பிக்பாஸ்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப் பாளரான டீனா என்பவர். "பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை மதுமிதா, தனக்கு வர வேண்டிய சம்பளத் தைக் கொடுக்க வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக வாட்ஸ்-அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி என்னை மிரட்டுகிறார்'' என கிண்டி போலீசில் புகார் கொடுத்தார் டீனா. போலீசும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

"""பிக்பாஸ்' வீட்டிற்குள் என்னதாங்க நடந்துச்சு? டீனாவை நீங்க மிரட்டுனீங்களா?'' என நடிகை மதுமிதா விடம் நாம் கேட்டோம். 22-ஆம் தேதி மாலை மீடியாவை சந்தித்தபோது, ""சம்பளப் பாக்கியைத்தான் கேட்டேனே தவிர, தற்கொலை மிரட்டல் விடுக்க வேயில்லை. இன்னும் நான் "பிக்பாஸ்' அக்ரிமென்டில்தான் இருக்கிறேன். அதனால் இப்போது எதுவும் சொல்ல மாட்டேன். அவர்கள் என்னைப் பற்றி மீடியாவிடம் பேசினால், நானும் பல பயங்கர ரகசியங்களை வெளியிடுவேன்'' என அதிரடி கிளப்பியுள்ளார்.

meera

நிலவரம் இப்படி போய்க்கொண்டி ருந்தபோது, கடந்த 22-ஆம் தேதி, டைரக்டர் அமீர் "பிக்பாஸு'க்கு எதிராக ரொம்பவே ஆவேசமானார். நடிகர் ஆரி நடித்திருக்கும் "எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடந்தது.

அதில் பேசிய அமீர், ""எல்லாரும் "பிக்பாஸ் பிக்பாஸ்'னு திரியுறாய்ங்க. நான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் கிடையாது; பார்க்க விரும்பியதும் கிடையாது. என்னோட நண்பர் ஒருத்தர் போனவாரம் வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோவை அனுப்பி, கண்டிப்பா பாருங்க'ன்னு சொன்னார். நானும் பார்த்தேன், அதுல "பிக்பாஸ் 'வீட்டுக்குள் இருக்கும் என்னோட நண்பன் டைரக்டர் சேரனை, நடிகர் சரவணன் ஒருமையில பேசுறார். சேரன் என்னைத் தப்பான இடத்துல தொட்டார்ன்னு சில நடிகைகள் சொல்றாங்க.

இதையெல்லாம் பார்த்து நான் ஆத்திரமாகி, "பிக்பாஸ்' வீட்டை அடிச்சு நொறுக்கி, சேரனை அங்கிருந்து தூக்கிட்டு வந்துருவோமான்னுகூட நினைச்சேன்'' என ஆவேசப் பட்டார் அமீர்.

இன்னும் 40 நாட்கள் "பிக்பாஸ்' நிகழ்ச்சி இருக்கு.

அதுக்குள்ள என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ?

-ஈ.பா.பரமேஷ்வரன்

cine030919
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe