"டிராஃபிக் ராமசாமி' படத்தின் முன்னோட்டம் பார்த்த கமல்ஹாசன்,""அஹிம்சைதான் சிறந்த வீரம் என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு இந்தியா. மகாவீரர் காலத்தில் தொடங்கி இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி மறைந் திருக்கிறது.
மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பாராளுமன்ற கிணற்றுக்குள் தேடினால் கிடைக்கமாட்டார்கள். மகாத்மா மாதிரியானவரை பாதசாரிகளுக் குள் தேடினால் கிடைப்பார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sac-kamal.jpg)
அப்படித் தேடாமல் கிடைத்த வர்தான் டிராஃபிக் ராமசாமி. இவரை ஊடகம் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு. இவரை ஒரு எக்ஸென்ட்ரிக் என்பதைப்போல சித்தரித்த துண்டு. ஆனால் டிராஃபிக் ராமசாமி எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக்கொண்டிருக்கிறார் . அப்படி ஒரு தைரியத்தைச் செயல்படுத்திய வீரர் இவர்.
அப்படிப்பட்டவரை இருக்கும் போதே படமாக்கும் முயற்சி, அதுவும் அவரே பார்த்துப் பாராட்டி ரசிக்கும்படி படமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படக்குழுவுக்கு இதுவே முதல் வெற்றி. அடுத்து வணிக வெற்றியும் வந்துசேரும்.
எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில் படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர். அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல் படங்கள் எடுத்தவர்.
அவரே ஒரு இயக்குநராக இருந்தும் விக்கி என்கிற இன்னொரு இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து அவருக்கும் ஒரு தொடக்கம் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
நடந்து முடிந்த கதையைப் படமாக்கும்போது சிலவற்றை வளைக்கலாம். ஆனால் நடந்து கொண்டிருக்கும் கதையைப் படமாக எடுப்பது சிக்கலானது.
நடந்த ஒரு கதையை "ஹேராம்' படமாக நான் எடுத்தபோது எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை அனுபவித்திருக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன் வீரத்தின் உச்சகட்டம்தான் அஹிம்சை. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி.'' இப்படி புகழ்ந்து தள்ளிவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/sac-kamal-t.jpg)