Advertisment

கமல் செய்தது நியாயமா? -கேட்கிறார் சுரேஷ் காமாட்சி!

/idhalgal/cinikkuttu/kamal-doing-justice-suresh-kamatchi

மல் நடித்த "பட்டாம்பூச்சி', "தாம்பத்யம் ஒரு சங்கீதம்', "இவர்கள் வருங்கால தூண்கள்' உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் sureshkamatchiஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-ஆவது தயாரிப்பாக உருவாகியிருக்கும் படம்தான் "மரகதக்காடு'. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சன

மல் நடித்த "பட்டாம்பூச்சி', "தாம்பத்யம் ஒரு சங்கீதம்', "இவர்கள் வருங்கால தூண்கள்' உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் sureshkamatchiஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-ஆவது தயாரிப்பாக உருவாகியிருக்கும் படம்தான் "மரகதக்காடு'. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Advertisment

மங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, ""தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்தி பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ்த் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு.

ranjanajayashree

எனக்கு கமல் சார்மீது ரொம்ப நாளாகவே, இப்போது வரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த "மரகதக்காடு' குழுவினர் இந்தப்படத்தைத் தயார் செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரைத் தொடர்புகொண்டனர். தயாரிப்பா ளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசிவரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா, இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரிய வில்லை.

Advertisment

நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன்- நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும்.

அப்புறமா மத்த வங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மை யில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி"" என தனது மனக்குமுறலைக் கொட்டினார்.

cine250918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe