விமல் நடிப்பில் உருவாகி ரிலீசுக்குத் தயாராக இருக்கும் படம் "கன்னிராசி.' இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். "கிங் மூவி மேக்கர்ஸ்' ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ். முத்துக் குமரன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு துளிகள்.

பாடலாசிரியர் யுகபாரதி ""கன்னிராசி' படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதைவிட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இதுபோன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தரவேண்டும். விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏனென்றால் நாம் எப்படி எடுத்தாலும் விருது கிடைக்காது. ஐந்து வருடம் இதுதான் நிலைமை.''

varalakshmi

Advertisment

இயக்குநர் முத்துக்குமரன்

""இந்தப்படம்தான் எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார் வரலட்சுமி. எந்தச் சிரமம் இருந்தாலும் அனுசரித்து நடித்துக்கொடுத்தார். நாம் என்ன சொன்னா லும் அதை அப்படியே செய்யக்கூடியவர் விமல்.

அதுபோல் நான் இயக்குநராக ஆனதற்கு முக்கியக் காரணம் அவர்தான். விமல் இல்லையென்றால் இப்படம் உருவாகி இருக்காது.''

வரலட்சுமி

""பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும்போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக் கப் பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்'' என அதிரடி கிளப்பினார்.

விமல்

""இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்துப் பெண்களோடுதான் இருப்பார்.

அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். மேலும் அடுத் தடுத்து பல படங் களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன்.

ஆனால், இந்த படத்தில் முதன் முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன்.''

விமல் "ஆம்பள'ன்னு சொன்னது "வரலட்சுமி'யத்தான். ஆனாலும் விழா கலகலப்பா முடிஞ்சது.