Advertisment

பரத்தை காப்பாற்றிய "காளிதாஸ்'

/idhalgal/cinikkuttu/kalidas-who-saved-barath

டந்த 20-ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் "காளிதாஸ்.' பரத் நடிப்பில், ஸ்ரீசெந்தில் எழுதி இயக்கியிருந்த இப் படத்தை DINA STUDIOS, INCREDIBLE PRODUCTION, LEAPING HORSE ENTERTAINMENT சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் என்டர்டெயின்மன்ட் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது. இப்படம் வணிகரீதியாகவும் ப

டந்த 20-ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் "காளிதாஸ்.' பரத் நடிப்பில், ஸ்ரீசெந்தில் எழுதி இயக்கியிருந்த இப் படத்தை DINA STUDIOS, INCREDIBLE PRODUCTION, LEAPING HORSE ENTERTAINMENT சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் என்டர்டெயின்மன்ட் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது. இப்படம் வணிகரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்திருந்தது. அதைக் கொண்டாடும்வகையில் படக்குழு மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை நடத்தியது.

Advertisment

bb

தயாரிப்பாளர் மணி தினகரன்

""இயக்குநரின் ப்ளானிங் நேர்த்தி மற்றும் பத்திரிகைகளின் பாராட்டுதான் எங்களை பெரிய வெற்றியடைய வைத்தது.''

Advertisment

இயக்குநர் ஸ்ரீசெந்தில்

""நல்லா ஒருபடம் பண்ணி யிருந்தோம். அதைக் கொண்டுவர ரொம்ப கஷ்டப்பட்டோம். ஒருவழியாக கொண்டுவந்தோம். படம் ப்ரிவியூ சோ போடும்வரை பயம் இருந்தது. ப்ரிவியூவில் பார்த்தவர்கள் படத்தைப் பாராட்டி மக்களிடம் கொண்டுசேர்த்தனர்.

நிறைய நல்ல மனங்கள்தான் இந்தப் படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்த்தது.''

நடிகர் பரத்

""வெற்றி நாயகன் என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்பநாள் ஆச்சு. நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகளாகின்றன. எனக்கும் சில படங்கள் தவறி இருக்கிறது. அது எல்லா ஹீரோக்களுக்கும் வரும்தான். ஆனால், என்றாவது ஒருநாள் நமக்கு ஒரு நல்லபடம் அமையும் என்று நினைத் தேன். அது இப்போது நடந்திருக்கி றது. சினிமா என்பது வணிகம் சார்ந்தது. நிறைய நல்லபடங்கள் நடித்திருந்தாலும் வணிகரீதியான வெற்றி ரொம்ப முக்கியம். 2017-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். சினிமாவில் நிறையபேர் இந்தப் படத்தைப் பார்த்து விட்டார்கள். நிறையபேர் படம் நல்லாருக்கு. ஆனால் இவர் நடித்திருக்கிறார்.

இவருக்கு மார்க்கெட் இல்லையென்று சொல்லியிருக்கிறார்கள். அது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது. எல்லாருமே இந்தப் படத்தைப் பெரிதாக்க வேண்டுமென்று மொத்த மாக உழைத்தோம். இயக்கு நர் ஸ்ரீசெந்தில் மிக நேர்த்தியாக உழைத்திருக்கி றார். ஒரு இயக்குநராக அவர் நின்றுவிட்டார்.''

-பரமு

cini311219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe