"ஹீரோ மகளும் ஹீரோயின் மகனும்' என்ற தலைப்பில் கடந்த இதழில் அட்டைப்படச் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த ஜோடியான லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா, அம்பிகா மகன் ராம் கேசவ் அறிமுகமாகும் படத்திற்கு "கலாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

Advertisment

ambika

கலைத்தாய் பிலிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி. பாலு தயாரிக்கிறார். ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- பாபுகுமார், இசை- நிஜாமுதீன், கலை- கல்லை தேவா, எடிட்டிங்- கோபிகிருஷ்ணா, ஸ்டன்ட் - டேஞ்சர் மணி, நடனம்- கல்யாண், கிரிஷ், தயாரிப்பு நிர்வாகம்- அருள்.

Advertisment

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அஸ்வின் மாதவன். இவர் இயக்குனர்கள் சுந்தர். சி, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது...

""சினிமாவில் சாதனைபுரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிலிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் மனிதனின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு நமக்குத் தேவை இல்லையென்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்திவிட்டு, வேண்டியதை கேட்டு பெறுவது பண்டமாற்று முறை மாதிரி யான ஒரு வியாபாரம் தான்.

Advertisment

நாம் வேண்டாமென்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்ப்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள்மீது எப்படி யெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படு கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை'' என்றார்.