Advertisment

"காலா' ஹீரோயினின் காதல்

/idhalgal/cinikkuttu/kala-love-heroine

"காலா'-வில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்றதுமே ஹாட் டாப்பிக்காகப் பேசப்பட்டவர் ஹூமா குரேஷி. பாலிவுட் நடிகையாக பல கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தவர், முதன்முதலாக கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். "காலா' டீசர் ஏற்படுத்தியிருக்கும் ஃபீவர்

"காலா'-வில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்றதுமே ஹாட் டாப்பிக்காகப் பேசப்பட்டவர் ஹூமா குரேஷி. பாலிவுட் நடிகையாக பல கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தவர், முதன்முதலாக கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். "காலா' டீசர் ஏற்படுத்தியிருக்கும் ஃபீவர் குறையாமல் இருக்கும் நிலையில், அதுகுறித்து ஹூமா குரேஷி உதிர்க்கும் சில சுவாரஸ்யங்கள்...

Advertisment

""தமிழ்மொழிக்கு புதிது. ஒரு மொழியை முழுமையாகக் கற்றுக் கொள்ள குறைந்தது ஒருவருடமாவது ஆகலாம். ஆனால், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மிக எளிது. நாடக நடிகை என்பதால் ஜிப்ரீஸ் பயிற்சியை "காலா' படப்பிடிப்பில் பயன்படுத்தி இருக்கிறேன்.

Advertisment

hemakroshi

பல திறமையான கலைஞர்களுடன் சேர்ந்து வேலைபார்த்ததால், என்னை மெருகேற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வருண் தவான், அக்ஷய் குமார், நவாசுதீன், மாதுரி தீக்சித் போன்ற ஒப்பற்ற கலைஞர்களோடு சேர்ந்து நடித்ததன்மூலம் நான் ஆசிர் வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன்.

திரையில் இமேஜ் குறித்து கவலைப்பட்டால், நம்மால் நடிக்க முடியாது. அதற்காகத்தானே வந்திருக்கிறோம். அதனால்தான் ஒவ்வொரு முறையும் மாறுபட்ட கதாபாத்திரங் களைத் தேர்வு செய்து நடிக்கிறேன். இயல்பாகவே நான் கூச்ச சுபாவம் கொண்ட பெண். பல சமயங்களில் ஹூமாவாக என்னால் செய்யமுடியாத விஷயங்களை ஹசீனாவாகவோ, ஜிம்லியாகவோ அல்லது சரீனாவாகவோ வாழ்வதன்மூலம் செய்ய முடிகிறது. நடிப்பின்மீது எனக்கு காதல் ஏற்பட்டதற்கும் இதுதான் காரணம்.'' இப்போதைக்கு இதுபோதுமா மக்களே...

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe