Advertisment

"காலா' EXCLUSIVE நியூஸ்!

/idhalgal/cinikkuttu/kala-exclusive-news

"கபாலி'-யில் ரஜினி வரும் ஒரு காட்சியில் கார்ல்மார்க்ஸ், ஏங்கெல்ஸ், அம்பேத்கர், விவேகானந்தர் ஆகிய தலைவர்களின் ஃபோட்டோக்களைக் காட்டிய டைரக்டர் பா. இரஞ்சித், பெரியார் ஃபோட்டோவை மட்டும் கவனமாகத் தவிர்த்திருப்பார்.

Advertisment

kala-rajini

அதேபோல் ""அம்பேத்கர் கோட்-சூட் போட்டதிலும் காந்தி கோட்-சூட்டைக் கழட்டியதிலும் அரசியல் இருக்கு' என்ற வசனமும் பேசியிருப்பார் ரஜினி. க்ளைமேக்சில், ""கோட்-சூட் போடுறது தான் உனக்குப் ப

"கபாலி'-யில் ரஜினி வரும் ஒரு காட்சியில் கார்ல்மார்க்ஸ், ஏங்கெல்ஸ், அம்பேத்கர், விவேகானந்தர் ஆகிய தலைவர்களின் ஃபோட்டோக்களைக் காட்டிய டைரக்டர் பா. இரஞ்சித், பெரியார் ஃபோட்டோவை மட்டும் கவனமாகத் தவிர்த்திருப்பார்.

Advertisment

kala-rajini

அதேபோல் ""அம்பேத்கர் கோட்-சூட் போட்டதிலும் காந்தி கோட்-சூட்டைக் கழட்டியதிலும் அரசியல் இருக்கு' என்ற வசனமும் பேசியிருப்பார் ரஜினி. க்ளைமேக்சில், ""கோட்-சூட் போடுறது தான் உனக்குப் பிரச்சினைன்னா, நான் போடுவேண்டா, கால் மேல கால் போடுவேண்டா ஸ்டைலா, கெத்தா'' என அனல் பறக்கும் வசனத்தைப் பேசியிருப்பார்.

Advertisment

ரஜினி என்னும் சூப்பர் ஸ்டார்மூலம் தனது அரசியலை திரையில் காட்டியவர் டைரக்டர் இரஞ்சித். இப்போது ரிலீசுக்குத் தயாராக உள்ள "காலா'-வில் "கபாலி'-யைவிட டேரிங்காக அரசியல் பேசியிருக்கிறாராம் ரஜினி.

rajini

""செம வெயிட்டு, நம்ம காலா சேட்டு'' என்ற ஆடியோ சிங்கிள் ட்ராக் கடந்த மே. 1-ஆம் ரிலீசானது.

ஜூன் 7-ஆம் தேதி "காலா' ரிலீசாகும் நிலையில், 35 நாட்களுக்குமுன்பே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ். மே. 5-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து ரஜினி திரும்பிய சில நாட்களில் "காலா'-வின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்ட மிட்டுள்ளனர்.

"காலா' படம் முழுக்க முழுக்க மும்பை தாராவியின் சேரிப்பகுதிகளில் நடப்பதுபோல் கதை அமைக்கப் பட்டுள்ளதால், தலித் தலைவராகவே வருகிறாராம் ரஜினி. ரஜினி படங்களில் எப்போதுமே ஸ்டார் ஹீரோயின்கள்தான் ஜோடிபோடுவார்கள். ஆனால் "கபாலி'யில் ராதிகா ஆப்தேவை செலக்ட் பண்ணிய இரஞ்சித், "காலா'-வில் ஈஸ்வரி ராவ்வை ஹீரோயினாக்கியுள்ளார். தலித் தலைவரான ரஜினிக்கு ஈஸ்வரி ராவ்தான் பொருத்தமாக இருக்கிறாராம்.

இனிவருவதுதான் EXCLUSIVE நியூஸ். சில பாடல் காட்சிகளிலும், ரஜினி தோன்றும் பெரும் பாலான காட்சிகளிலும் அண்ணல் அம்பேத்கர் சிலையையும் இரட்டைமலை சீனிவாசனின் சிலையையும் காண்பித்திருக்கிறாராம் ரஞ்சித். தனது அரசியல் கட்சிப் பெயரை அறிவிக்க ரஜினி தயாராக இருக்கும் நிலையில் பக்காவாக ரூட் போட்டுக் கொடுத்திருக்கிறார் டைரக்டர் பா. இரஞ்சித்.

kalafamily

"" "காலா'-வில் தலித் தலைவன் வேடத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தே ரஜினியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் அமையும்'' என்கிறார்கள், கோடம்பாக்கத்தின் சீனியர் தயாரிப்பாளர்கள்.

-ஈ.பா. பரமேஷ்

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe