பூதோபாஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் முதல் படம் "கைலா.'
இந்தப் படத்தில் தானா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கௌசல்யா, செர்பியா, ஆதியா, சிசர் மனோகர் ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kaila.jpg)
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்- பாஸ்கர் சீனுவாசன்.
கொடைக்கானல், சென்னை, புதுச்சேரி போன்ற இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள் ளது. கதாநாயகி தானா நாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவர்; இப்போது லண்ட னில் படித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்.
""தானா நாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார்.அவர் பேயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து, அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப் பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சினையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச் சினைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கியிருக்கிறோம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/kaila-t.jpg)