Advertisment

காஞ்சனா-3'யும் ஆம்புலன்சும்

/idhalgal/cinikkuttu/kachana-3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் "காஞ்சனா-3' கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

"காஞ்சனா' முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்பத் ராம், "காஞ்சனா-3'-யில் அகோரியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

Advertisment

கூன் வளைந்த முதுகோடு, படம் முழுவதும் குனிந்த படியே நடித்திருக்கும் சம்பத் ராமின் நடிப்பும், அவரது அகோரி வேடமும் படத்தில் முக்க

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் "காஞ்சனா-3' கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

"காஞ்சனா' முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்பத் ராம், "காஞ்சனா-3'-யில் அகோரியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

Advertisment

கூன் வளைந்த முதுகோடு, படம் முழுவதும் குனிந்த படியே நடித்திருக்கும் சம்பத் ராமின் நடிப்பும், அவரது அகோரி வேடமும் படத்தில் முக்கிய பங்குபெறுவதோடு, படத்தின் திருப்புமுனையாக அமைந்திருப்பதால், அவரது வேடத்திற்கும், அதில் அவர் நடித்த விதத்திற்கும் பாராட்டு குவிந்துவருகிறது.

k

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கும் சம்பத் ராம், அப்படத்தின் சண்டைக்காட்சியில் ஈடுபட்டபோது விபத்துக்கு உள்ளாகி உடல் நிலை முடியாமல் போனாலும், படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துக்கொடுத்துவிட்டு சென்னை திரும்பியவர், திடீர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட, மருத்துவமனையில் பரிசோதித்த பிறகே அவரது நெஞ்சில் ரத்தம் கட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. உடனே மருத்துவர்கள் அவரை அட்மிட்டாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அன்றைய தினத்தில் "காஞ்சனா-3' படப்பிடிப்பிற்காக வலியையும் பொருட்படுத்தாமல் நடிக்க கிளம்பியிருக்கிறார். மருத்துவர்கள் எவ்வளவோ அறிவுறுத்தியும், நெஞ்சுவலியை தாங்கிக்கொண்டு அந்த காட்சியில் நடித்திருக்கிறார். இதை அறிந்த லாரன்ஸ், அவருக்காக ஆம்புலன்ஸ் ஒன்றையும் படப்பிடிப்பில் தயார்நிலையில் வைத்திருந்தாராம்.

ஆனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், நல்லபடியாக நடித்து முடித்துவிட்டு, பிறகு மருத்துவமனையில் அட்மிடாகி சிகிச்சை பெற்றிருக்கிறார் சம்பத் ராம்.

தற்போது, ஆக்டிவாக மீண்டும் படப்பிடிப்புகளில் பிஸியாகியிருக்கும் சம்பத் ராம், பிரபு சாலமன் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருவதோடு, சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதுப் படம் ஒன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

சத்யசிவா இயக்கி வெளியீட்டுக்கு தயாராக உள்ள "1945' படத்திலும் சம்பத் ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

விஜய் ஆண்டயின் "கொலைகாரன்' படத்திலும் நடித்திருக்கிறார்.

cine070519
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe