ஜோதிகா 'மொழி' படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து இயக்குநர் ராதாமோகன் டைரக்ஷனில் 'துமாரி சுலு' ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'காற்றின் மொழி' படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விதார்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 'காற்றின் மொழி' படத்தின் ரிலீஸ் வரும் நவம்பர் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

jothika

படத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது.... ""ஒவ்வொரு வாரமும் மழை பெய்வதுபோல் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசை கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனைத் தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்குத் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்குப் பிறகு படம் ரிலீசாகும்'' என பதிவிட்டுள்ளார்.