Advertisment

சந்தி சிரிக்கும் சினிமா "சமாச்சார'ங்கள்!

/idhalgal/cinikkuttu/junction-laughing-cinema

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் அதிரடி ஆட்டம் பலருடைய அடிவயிற்றை கலக்கிக்கொண்டிருக்கிறது.

Advertisment

தெலுங்குப் படவுலகின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்களின் மகன்களுடைய லீலைகளை அம்பலப்படுத்தப் போவதாக ஸ்ரீரெட்டி அறிவித்தார். அதிலிலிருந்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் வீடுகளில் வெடிக்கப்போகிற கலவரங்களை நினைத்து அச்சத்தில் இருக்கிறார்கள்.

Advertisment

sreereddy

படுக்கையைப் பகிர்ந்தால் தான் படவாய்ப்பு என்பதே சினிமா உலகின் இயல்பாகிப் போனது. ஆனால், நடித்து வாய்ப்பை இழக்கும் நிலை யிலுள்ள சில நடிகைகள் திடீரென்று தன்னை பாலிலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக இயக்குநர்கள்மீதும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள்மீதும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தப் பார்க் கிறார்கள்.

நீலப்படக் காட்சிகளைப் போல திரையில் நடிக்கக் கூசாத ஹாலிலிவுட் நடிகைகளே தாங்கள் அனுபவித்த பாலிலியல் துன்பங்களை வெளியிட்டுவரும் நிலையில், கண்ணியமாக திரையில் காட்சி தரும்(!) இந்திய சினிமா நடிகைகள் தாங்கள் பட்ட துன்பங்களையும் கூறாமல் இருப்பார்களா?

ஆனால் என்ன இப்படிப்பட்ட புகார்களைக் கூறும் நடிகைகள் அனைவருமே பட வாய்ப்புகளை இழக்கும் நிலையில் இருப்பவர்கள் என்பதுதான் யோசிக்க வைக்கிறது.

சுசீலீக்ஸ் என்ற பெயரில் தமிழில் பாடகி சுசித்ரா சினிமா பிரபலங்கள் பலருடைய அந்தமாதிரி தொடர்புகளை அம்பலப்படுத்தினார். அது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

sreereddyஇப்போது, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் அதே பாணியில் தெலுங்குப் பட உலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பலருடைய வண்டவாளங்களை அம்பலப் படுத்தத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லை. ""தெலுங்குத் திரையுலகில் அழகான உடற்கட்டுள்ள 90 சதவிகிதம் நடிகைகள் இந்தப் பிரச்சினையைச் சந்தித்தவர்கள்'' என்கிறார்.

""படவாய்ப்பு பறிபோகும் பயத் தில் வெளியில் சொல்ல அவர்கள் தயங்குகிறார்கள்'' என்று ஸ்ரீரெட்டி கூறுகிறார்.

இயக்குனர் சேகர் கம்முலா தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்ற ஸ்ரீரெட்டியின் ட்விட்டர் பதிவுகளும் குற்றச்சாட்டுகளும் தெலுங்குத் திரையுலகம்மீது படிந்த மோசமான கறை என்று பலரும் கருத்து சொல்கிற வேளையில் ஸ்ரீரெட்டியின் திரைப்பட நடிகர் சங்க உறுப்பினர் உரிமை பறிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். அதன்படி, ஹைதராபாத்திலுள்ள பிலிலிம் சேம்பர் பகுதிக்கு வந்த அவர், தனது உடைகளை களையத் தொடங்கினார். அவர் முன்கூட்டியே அறிவித்திருந் தாலும், அவரைத் தடுக்க யாரும் முயற்சிக்கவில்லை. எல்லாரும் படம் பிடிப்பதி லேயே கவனமாக இருந் தார்கள்.

எனவே, தனது மார்புவரை உடையைக் களைந்த ஸ்ரீரெட்டி வேறு வழியில்லாமல் மார்பகங்களை மறைத்து தரையில் அமர்ந்து விட்டார். பாவம் நமது ரசிகர்களும் காவல்துறையினரும் கிருஷ்ண பரமாத்மாபோல வந்து தடுப்பார்கள் என்று நினைத்தார். அது நடக்க வில்லை.

sreereddyஅவர் எதிர்பார்த்த மற்றொரு விஷயம் நடந்தது. ஆம். இந்திய அளவில் பாப்புலாரிட்டி கிடைத்தது.

இந்நிலையில்தான், அடுத்த அதிரடியாக, தெலுங்குத் தயாரிப்பாளரின் மகன்மீது பகீர் படுக்கை புகார் கூறினார். அரசுக்குச் சொந்தமான ஒரு ஸ்டூடியோவை யாரும் பயன்படுத்தமாட்டார்கள் என்பதால், பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அந்த ஸ்டூடியோவை சிவப்பு விளக்கு பகுதியாகவே மாற்றிவிட்டார்கள் என்றுகூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தனக்கு பாலிலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் மகன் தொடர்பான புகைப் படங்களை விரைவில் 'ஸ்ரீலீக்ஸில்' வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி, பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கில் முன்னணி ஹீரோவுமான நடிகர் ராணா டகுபதியின் தம்பியுமான அபிராம் டகுபதியும் தானும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். இந்தப் படங்கள் தெலுங்குத் திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், ""அந்தப் படங்கள் அனைத்தும் ஸ்ரீரெட்டியே எடுத்த செல்ஃபி படங்களாக இருக்கின்றன. எனவே, அவரை அபிராம் வலுக்கட்டாயமாக பாலிலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியதாகக் கருத முடியாது'' என்று தெலுங்குத் திரையுலகினர் கூறுகிறார்கள்.

ஸ்ரீரெட்டியின் இந்த அதிரடிகள் அவருக்கு சினிமா கொடுத்த புகழைக்காட்டிலும், அதிக புகழைக் கொடுத்திருக்கின்றன. அனேகமாக சினிமா வாய்ப்பு இல்லாமலே இவருக்கு வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கிண்டலடிக்கிறார்கள்.

அதேசமயம், பெண்ணுரிமை அமைப்புகளும், சில மாணவர் அமைப்புகளும் இவருக்கு ஆதரவாக இருக்கின்றன. எனவே, அடுத்தடுத்து ஸ்ரீரெட்டியின் அதிரடிக் காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஸ்ரீரெட்டி இப்படி தினமும் தினுசு தினுசாக செக்ஸ் திகில் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தி ஹீரோயின் ஒருவரோ வேறொரு டிசைனில் செக்ஸ் பிட்டைப் போடுகிறார்.

அவரின் பெட்ரூம் ஸ்டேட்மெண்ட் இதோ...

""பட வாய்ப்பு களுக்காக படுக்கைக்கு அழைப்பவர்களை நான் பக்கத்திலே விடுவதில்லை. இதனால் பல வாய்ப்புகளை இழந்தி ருக்கிறேன்.

சினிமாவில் பாலிலியல் தொல்லை கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், படுக்கைக்கு அழைப்பவர்களுடைய பெயர்களை வெளியிட்டால் பட வாய்ப்புகள் போய்விடும் என்பதால் பெயர்களை வெளி யிட தயங்குகிறார்கள்.

சினிமாவில் ஒவ்வொரு பெண்ணுமே பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டிருப்பார். வாய்ப்புக்காக பலன் எதிர்பார்க்கும் ஆட்களை நான் நெருங்கவே விடுவதில்லை.'' இப்படியெல்லாம் கிளப்பிவிடுபவர் இந்தி நடிகை திவ்யா தத்தா.

ஆனால், இவருடன் நடிப்பவர்களுடன் ரொம்பவே நெருக்கமும் இறுக்கமும் ஆகிவிடுவார்.

மொத்தத்தில் சந்தி சிரிக்கிறது சினிமா உலகம்.

-ஆசோ

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe