Advertisment

ஜூலியின் ராத்திரி ரவுசு!

/idhalgal/cinikkuttu/julies-nightly-rushes

ர்ச்சைக்கும் "பிக்பாஸ்' புகழ் ஜூலிக்கும் அப்படி ஒரு பொருத் தம் கச்சிதமாக அமையுதுபோல. கடந்த வாரம் ஒருநாள் இரவு (அது சனிக்கிழமைகூட அல்ல; திங்கட் கிழமை.) சென்னை வேப்பேரி டவுட்டன் ஏரியா. அந்த ஏரியா வின் முக்கிய சாலை ஒன்றில், சொகுசு கார் ஒன்று ரொம்ப நேரமாக நின்றுகொண்டிருந்தது. இந்தக் காரால் பின்னால் வந்த பல கார்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.

Advertisment

ஆனால், எதைப் பற்றியும் கவலைப் படாமல் உள்ளே மூன்று ஆண்களும் ஒரு இளம்பெண்ண

ர்ச்சைக்கும் "பிக்பாஸ்' புகழ் ஜூலிக்கும் அப்படி ஒரு பொருத் தம் கச்சிதமாக அமையுதுபோல. கடந்த வாரம் ஒருநாள் இரவு (அது சனிக்கிழமைகூட அல்ல; திங்கட் கிழமை.) சென்னை வேப்பேரி டவுட்டன் ஏரியா. அந்த ஏரியா வின் முக்கிய சாலை ஒன்றில், சொகுசு கார் ஒன்று ரொம்ப நேரமாக நின்றுகொண்டிருந்தது. இந்தக் காரால் பின்னால் வந்த பல கார்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.

Advertisment

ஆனால், எதைப் பற்றியும் கவலைப் படாமல் உள்ளே மூன்று ஆண்களும் ஒரு இளம்பெண்ணும் காருக்குள்ளே அமர்ந்திருந்தனர்.

Advertisment

julie

(சத்தியமா சும்மாதாங்க உட்கார்ந் திருந்தாங்க.) அப்போது டூட்டி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டி ருந்தார் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் ஹெட்கான்ஸ்டபி ளாக வேலை செய்யும் பூபதி.

அவர் போகும் அந்த ரோட்டில் அந்த கார் நிற்பதைப் பார்த்ததும், காரின் அருகே சென்று உள்ளே இருந்தவர்களிடம் காரை எடுக்கு மாறு சொல்லியிருக்கார். டிரைவர் சீட்டில் இருந்த பிரசாந்த் என்ற இளைஞர், ""நான் யார் தெரியுமா, என் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா?'' என்று ஏடாகூட மாகப் பேசியிருக்கிறார்.

பின் சீட்டில் இருந்த இளம் பெண்ணிடம், ""வண்டிய எடுக்கச் சொல்லுங்கம்மா'' என்று கான்ஸ்டபிள் பூபதி சொன்னதும், ""நான் யார் தெரியுமில்ல, "பிக்பாஸ்' ஃபேமஸ் ஜூலி'' என்றி ருக்கிறார்.

""நீ யாரா இருந்தா என்ன! மொதல்ல வண்டிய எடு'' என்றதுதான் தாமதம், ஜூலியும் அவரது பாய்ஃபரண்டும் சேர்த்து ஹெட்கான்ஸ்டபிளை பொளந்து கட்டிவிட்டார்கள். காயமடைந்த கான்ஸ்டபிள், தான் பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷனிலேயே கம்ப்ளெய்ன்ட் பண்ணினார்.

இடையில் என்ன நடந்ததோ, எப்படி நடந்ததோ தெரிய வில்லை, ஜூலி & கோமீது எந்த ஆக்ஷனும் இல்லை.

ஆனால், அந்த ராத்திரி ரவுசு அத்தனையையும் மறுக்கிறார் ஜூலி. ""ஒரு படத்துல ஹீரோயினா நடிப்பது விஷயமாக பிரபல டைரக்டர் ஒருத்தரைப் பார்த்துப் பேசிட்டு, என் வீட்டுக்குச் செல்வதற்காக எழும்பூர் மெட்ரோ ஸ்டேஷன்ல கார்ல டிராப் பண்ணினார் என் ஃப்ரண்ட். கடைசி டிரெய்னைப் புடிச்சு வீட்டுக்குப் போயிட்டேன். நீங்க சொல்றது மாதிரி, ராத்திரி அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை, அந்த போலீஸ்காரர் யாருன்னே எனக்குத் தெரியாது. அப்புறம் முக்கியமான விஷயம், பிரசாந்துன்னு எனக்கு பாய்ஃப்ரண்டே கிடையாது. என்னோட பாய்ஃப்ரண்ட் பேர் இப்ரான்.( அடடா நாட்டுக்கு எவ்வளவு முக்கியமான சேதி பாருங்க மக்களே.)

நடித்து பேர் வாங்கும் நடிகைகள் இருக்கிறார்கள். சர்ச்சை களில் சிக்கி சக்கையாகும் நடிகைகளும் இருக்கி றார்கள். இரண்டாம் ரகத்தைச் சேர்ந்த ஜூலி, இப்போது நடித்து வரும் பக்திப் படத்தின் பெயர் அம்மன் தாய்.

-அரவிந்த் & பரமு

cine260319
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe