Advertisment

ஜிம்மு, கும்மு ரியாமிகா!

/idhalgal/cinikkuttu/jimmu-kummu-riyamika

மீபத்தில் வெளியான "X வீடியோஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர். சொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே.. அப்படி வந்தவர்தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களத

மீபத்தில் வெளியான "X வீடியோஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர். சொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே.. அப்படி வந்தவர்தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களது குடும்ப நண்பர் என்பதும் இவர் சினிமாவுக்கு(ள்) வர ஒரு காரணம்..

Advertisment

remika

படிக்கும்போதே சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள ரியாமிகாவுக்கு "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' என்கிற படம்தான் அறிமுகம் கொடுத்தது. ஆனால் சமீபத்தில் வெளியான "ல வீடியோஸ்' படம் ஓரளவு அடையாளத்தையும் கொடுத்துள்ளது.

இப்போது "அகோரி' என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரியாமிகா. "ஹாரர்' த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் மொத்தமே ஐந்து கேரக்டர்கள் தான் என்பதும் அதில் ரியாமிகா ஒருவர்தான் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

""இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சுமார் ஒரு மாதம் நடந்தது. ஒவ்வொருவருக்கான காட்சியாக மாற்றி மாற்றி எடுத்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அங்கே வேடிக்கை பார்க்க வந்த பசங்களுக்கு கிளாசிக் டான்ஸ் கற்றுக்கொடுத்தேன்.. மீதி நேரங்களில் நான் உட்பட மற்ற நடிகர்களும் ஒரு டெக்னீஷியனாகவும் இறங்கி வேலை பார்த்தோம்'' என்கிறார் ரியாமிகா.

"மாயவன்' படத்தைத் தொடர்ந்து சி.வி. குமார் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய ரோலிலில் நடிக்கிறார் ரியாமிகா.

""என் படங்களைப் பார்த்தவர்கள், இயல்பாக நடிக்கிறீர்களே, நீங்கள் கூத்துப்பட்டறை ஆர்ட்டிஸ்ட்டா என அடிக்கடி கேட்பதுண்டு அதனாலேயே இப்போது கூத்துப்பட்டறையில் பயிற்சிக்காக சேர்ந்துவிட்டேன்'' என்கிற ரியாமிகா ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜிம், சிலம்பம், டான்ஸ் கிளாஸ், நடிப்புப் பயிற்சி என காலிலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழல்கிறார்.

ரியாமிகாவுக்குப் பிடித்த நடிகை என்றால் பாலிலிவுட்டில் கங்கனா, கோலிலிவுட்டில் நயன்தாரா, அனுஷ்காதானாம். ரியாமிகா என்றால் என்ன என்று பெயர்க்காரணம் கேட்டால் "ஒரிஜினல்' என்று அர்த்தம் சொல்லிலி சிரிக்கிறார்.

ப்

Advertisment
cine140818
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe