ல்லா டி.வி. சீரியல் களிலுமே திடீர் திடீரென கேரக்டர் ஆர்டிஸ்டுகள் காணாமல் போய்விடுவார்கள். இன்றுமுதல் அவர் நடித்த கேரக்டரில் இவர் நடிப் பார் என டைட்டில் போடுவார்கள்.

rr

ஆனால், "ராசாத்தி' சீரியலிலோ, கதாநாய கியையே தூக்கிக் கடாசிவிட்டார்கள். குஷ்புவின் அவ்னி சினிமேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்த அன்பு தயாரிக்கும் சீரியல்தான் "ராசாத்தி'. 25 எபிசோடுகள் வரை ராஜ்கபூர் டைரக்ட் பண்ணினார். அதன்பின் அவரைத் தூக்கிவிட்டு, இப்போது பாபுசிவன் டைரக்ட் பண்ணிவருகிறார்.

இவரையும் எப்போது தூக்கப் போகிறார்களோ?

Advertisment

இப்ப விஷயம் என்னன்னா... "ராசாத்தி'-யில் ராசாத்தியாக, ஹீரோயின் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த பவானி ரெட்டி. எல்லா ஏரியாவிலும் நன்றாகத் தான் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் என்ன நடந்ததோ, ஏது நடந் ததோ, பவானி ரெட்டியைத் தூக்கிக் கடா சிவிட்டு, பெங் காலி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் கல்கத்தாவைச் சேர்ந்த தேவ்ஜனி மொடக் என்பவரை ராசாத்தியாக்கி விட்டார்கள். இந்த தேவ்ஜனி என்ட்ரியானதன் பின்னணியில் தேவயானி இருப் பதாக ஒரு குரூப்பும், ""அதெல்லாம் கிடையாது, இரண்டாவது கல்யாணம் பண்ணும் முடிவுக்கு வந்துவிட்ட பவானி ரெட்டி, சீரியலிலிருந்து விலகிக்கொள் வதாகச் சொன்னதால்தான் தூக் கினோம்'' என ஒரு குரூப்பும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

-பரமு